பிஎன் பெரும்புள்ளிகளை எதிர்க்கத் தயாராகின்றனர் ஓராங் அஸ்லிகள்

1asliஒராங் அஸ்லி சமூகம் எப்போதுமே ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளது. அதனால் அவர்கள் பிஎன் வாக்கு வங்கியில் ‘நிலையான வைப்புத்தொகை’என்றே கருதப்பட்டு வந்தனர். ஆனால், வரும் பொதுத் தேர்தலில் அது மாறும் எனத் தெரிகிறது. ஓராங் அஸ்லிகள் பிஎன் பெரும்புள்ளிகளை எதிர்த்து தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1asli1மலேசியாகினி தீவகற்ப மலேசியா ஓராங் அஸ்லி சங்கத்தின் உதவித் தலைவர் சிம்பான் சுடாவைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் (பகாங்கில்) ரொம்பின், பெரா, (பேராக்கில்) தாப்பா ஆகியவற்றைக் குறி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

தாப்பாவில், வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான அமானி வில்லியம்ஸ்  @ பா தோனி நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

பிகேஆரின் பெல்டா மற்றும் ஓராங் அஸ்லி விவகாரப் பிரிவு துணைத் தலைவர் பொப் மனோலான் முகம்மட் பெராவில் களமிறங்கலாம்.

2008 தேர்தலில் அவ்விரு தொகுதிகளிலும் பிஎன் வென்றது. தாப்பாவில் மஇகாவின் எம்.சரவணன் வென்றார். பெராவில் அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்.

ஒராங் அஸ்லி மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றியுள்ள சிம்பான், தாம் ரொம்பினில் போட்டிடக்கூடும் என்றார். அத்தொகுதியில் 14,000 ஓராங் அஸ்லி வாக்காளர்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

என்றாலும், அப்பகுதியில் உள்ள 28 தோக் பத்தின்கள் (சமூகப் பிரதிநிதிகள்)தான் அதை முடிவு செய்வர் என்றாரவர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்கு முன்னதாக சந்தித்துப் பேசுவார்கள்.

1asli 2“ஏப்ரல் 18-இல்தான் யார் எங்கே போட்டியிடுவார்கள் என்பது தெரிய வரும்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

சிம்பான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை. அப்படியானால் அவரின் ஆதரவு யாருக்கு?

“அம்னோவா வேறு கட்சியா, எனக்கே தெரியாது.

“ஆனால், (பிகேஆர் நடப்பில் தலைவர்) அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சனில் உள்ள என் வீட்டுக்கு வந்திருக்கிறார்”, என்று சிரித்துகொண்டே சொன்னார்.

பல ஓராங் அஸ்லிகள் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதை அடுத்து அவர்களின் பாரம்பரிய நில உரிமை போன்ற விவகாரங்களுக்கு இனி முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு ஒரே ஒரு பிரதிநிதிதான் இருக்கிறார். அவர், அம்னோ செனட்டர் முகம்மட் ஒலியன் அப்துல்லா.