பிரதமர் சீக்கியர்களுக்கு 4 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்

sikhsவைசாகி கொண்டாட்டங்களை ஒட்டி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 10 சீக்கிய  அமைப்புக்களுக்கு மொத்தம் 3.84 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளார்.

பாயான் பாரு, சுபாங், ஷா அலாம் ஆகியவற்றில் புதிய குருத்துவாரைக் கட்டுவது, பெட்டாலிங்  ஜெயாவில் உள்ள குருத்துவாரை விரிவுபடுத்துவது ஆகியவை அந்த ஒதுக்கீடுகளுக்கான நோக்கங்களில்  அடங்கும். இதர பல விஷயங்களுடன் சீக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கும் நன்கொடை  அளிக்கப்பட்டது.

சீக்கிய சமூகத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள உதவிகளும் புதிய அறிவிப்புக்களும் இரண்டு
தரப்புக்கும் இடையில் நம்பிக்கை மேலோங்க துணை புரியும் என நஜிப் தமது உரையில் நம்பிக்கை
தெரிவித்தார்.

“நான் இதனை அரசியல் செராமாவாக நடத்த விரும்பவில்லை. என்றாலும் பிஎன் அரசாங்கத்தை
ஆதரிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த வேண்டிய அவசியம்
உள்ளது.”

“நான் தலைமை தாங்கி வழி நடத்தும் பிஎன் அரசாங்கம் எல்லா மலேசியர்களையும் பரிவுடன்
கவனித்துக் கொள்கிறது. சொன்னதைச் செய்யும் அரசாங்கம் அதுவாகும்.”

“ஆகவே எங்களை நம்புங்கள். நாங்கள் உங்களை மென்மேலும் சிறந்த வளமான மலேசியாவுக்குக்
கொண்டு செல்வோம்,” என நஜிப் தமது உரையை முடித்துக் கொண்டார்.