“13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி தனது வேட்பாளர்களாக முஸ்லிம் அல்லாத தனிநபர்களை நிறுத்தும் வியூகம் பிஎன் -னுக்கு பெரிய மருட்டல் அல்ல.”
இவ்வாறு கெடா அம்னோ தொடர்புக் குழுத் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் சொல்கிறார்.
மலாய் வேட்பாளர்களை நிறுத்துவது என தனது தோழமைக் கட்சியான டிஏபி செய்த முடிவுக்கு பதில்
கொடுக்கும் வகையில் அந்த வியூகம் அமைந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.
“கெடாவில் டிஏபி மலாய் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்த போது அது பாஸ் கட்சிக்கு ஒரளவு
மருட்டலாக அமைந்தது. ஆகவே ஜோகூரில் பாஸ் கட்சி சார்பில் முஸ்லிம் அல்லாத, மலாய் அல்லாத
தனி நபர்களை தேர்தலில் நிறுத்த அது எண்ணியுள்ளது.”
“எது எப்படி இருந்தாலும் நாங்கள் அதனை பெரிய மருட்டலாக எண்ணவில்லை. அவர்களை
எதிர்கொள்ள பிஎன் நம்பிக்கையான, அனுபவம் வாய்ந்த, தகுதி உடைய வேட்பாளர்களை நிறுத்துவதே
முக்கியமாகும். நாங்கள் யாரை எதிர்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறோம்,” என முக்ரிஸ் நேற்றிரவு
சுங்கைப்பட்டாணியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
பாஸ் ஆதரவாளர் மன்றத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை வரும் தேர்தலில்
கட்சியின் சார்பில் நிறுத்தப் போவதாக நேற்று ஜோகூர் பாஸ் அறிவித்தது. .