செர்டாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு ‘துரோகி’ எனத் தான் கருதும் வேட்பாளரை நிறுத்த பிஎன் திட்டமிட்டுள்ளதாக தான் கூறிக் கொள்வது மீது செர்டாங் மசீச தொகுதி போர்க் கொடி தூக்கியுள்ளது.
அதன் தொடர்பில் இன்று காலை செர்டாங் மசீச தலைமையகத்தில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட கட்சி
உறுப்பினர்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அந்தத் ‘துரோகி’ தெர்வு செய்யப்பட்டால் தேரல் பிரச்சாரத்தைப் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.
பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் அந்தத் துரோகியைப் பெயர் குறிப்பிட தொகுதித் தலைவர்
லியூ யுவப் கியோங் மறுத்து விட்டார்.
என்றாலும் அந்தத் துரோகியின் அடையாளம் செர்டாங்கில் ஊரறிந்த ரகசியம் என அவர் சொன்னார்.
2008 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்தத் துரோகி மசீச ரகசியங்களை பரம எதிரியான டிஏபி-க்கு வழங்கியதாகவும் லியூ கூறிக் கொண்டார்.
“அந்தத் துரோகியின் ஆதரவாளர்கள் ஒரு சமயத்தில் டிஏபி டி சட்டையை அணிந்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.”
“அந்தத் துரோகியின் நடவடிக்கை மசீச அடித்தட்டு உறுப்பினர்களுக்கும் பிஎன் தேர்தல் எந்திரத்துக்கும்
அவமானத்தை ஏற்படுத்தியது,” என அவர் மேலும் சொன்னார்.
அதன் காரணமான செர்டாங் மசீச தொகுதி அந்த நபரைத் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்
போவதில்லை என லியூ குறிப்பிட்டார்.
லியூ முகாமைச் சேர்ந்தவர்கள் முன்னாள் செடாங் மசீச தலைவர் யாப் பியான் ஹோன் -னுக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்களுடன் இணக்கமாக இல்லை என சீன மொழி நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
செர்டாங்கில் தங்கள் வேட்பாளரை நிறுத்துவதற்கு யாப் முகாமுக்கு கட்சித் தலைமையகம் அனுமதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதனால் லியூ முகாம் ஒரங்கட்டப்பட்டுள்ளது.
தற்போது செர்டாங் தொகுதி டிஏபி-யைச் சேர்ந்த தியோ நீ சிங் வசம் உள்ளது.
லியூ ஆர்ப்பாட்டத்தின் போது தாம் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதால் தாம் அது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என யாப் தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.