பிஎஸ்எம் பக்காத்தானிடம் சொல்கிறது: தோல்வி -தோல்வி நிலையை உருவாக்க வேண்டாம்

PSM2008ம் ஆண்டு பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia போட்டியிட்ட சிலாங்கூர் தொகுதிகளில் பிகேஆர்  தன்மூப்பாக தனது வேட்பாளர்களை பெயர் குறிப்பிடுமானால் பேச்சுக்கள் முறிவடைந்து மும்முனை போட்டி  நிகழக் கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தி விடும் என அந்தக் கட்சி பக்காத்தான் ராக்யாட்டை எச்சரித்துள்ளது.

உலு லங்காட்டில் இன்றிரவு மாபெரும் நிகழ்ச்சி ஒன்றில் தனது சிலாங்கூர் மாநில வேட்பாளர் பெயர்களை  அறிவிக்க பக்காத்தான் தயாராகி வரும் வேளையில் பிஎஸ்எம் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அந்த நிகழ்வில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித்
இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

“அது அந்த வழியில் சென்றால் அது சோகமான முடிவாக இருக்கும். நாம் அதனைத் தீர்க்க முடியும் என நான்
உண்மையில் நம்புகிறேன்.”PSM1

“பிஎஸ்எம் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்களை அவர்கள் அறிவிக்க மாட்டார்கள் என நான்  நம்புகிறேன். அவ்வாறு அறிவித்தால் நிலைமை மேலும் சிக்கலாகும் அல்லது பேச்சுக்கள் முறிவடையலாம்,” என  பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் இன்று பிற்பகல் கூறினார்.

12வது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட பிஎஸ்எம் வேட்பாளர்கள் மே 5ம் தேதி தங்கள்  சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றனர். 10 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர் 2008 ஜுலை  மாதம் பிஎஸ்எம் ஒர் அரசியல் கட்சியாக இறுதியில் பதிவு செய்யப்பட்டது.

பிஎஸ்எம் தனது சின்னத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும் என பிகேஆர் விரும்புகின்றது. அந்த
சோஷலிசக் கட்சியின் கை முஷ்டி சின்னம் மக்களுக்குத் தெரியாததால் குழப்பம் ஏற்படும் என பிகேஆர்
அதற்குக் காரணம் கூறுகின்றது.

இல்லை என்றால் பிஎஸ்எம் போட்டியிட எண்ணம் கொண்டுள்ள இடங்களில் பிகேஆர் தனது சொந்த
வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தத் தேக்க நிலையை அகற்றுவதற்கு பிகேஆர் கட்சியின் அன்வார் இப்ராஹிம், தியான் சுவா, டாக்டர்
சேவியர் ஜெயகுமார் ஆகியோருக்கும் பிஎஸ்எம் கட்சியின் நாசிர் ஹஷிம், டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், எஸ்  அருட்செல்வன் ஆகியோருக்கும் இடையில் கடைசி நேர முயற்சியாக கூட்டம் நடைபெற்றதாக
மலேசியாகினிக்கு தெரிய வந்துள்ளது,

அந்தச் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

 

TAGS: