பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia, கேமிரன் ஹைலண்ட்ஸ்-ல் போட்டியிடுவது பற்றியும் பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிட பக்காத்தான் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ள 11 இதர தொகுதிகள் பற்றியும் விவாதிக்கவிருக்கிறது.
சிலாங்கூர் செமினிக்கான தனது சொந்த வேட்பாளரை பிகேஆர் நேற்றிரவு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தக்
கட்சியின் தேசியக் குழு இன்றிரவு அவசரக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
செமினி தொகுதியில் பிஎஸ்எம் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுக்கள் முடியும் வரையில் அந்தத் தொகுதி குறித்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக தாம் தெரிவித்த வாக்குறுதியை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீறி விட்டதாக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் கூறியுள்ளார்.
பிஎஸ்எம் அவசரக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல்:
நமது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி 4 இடங்களில் போட்டியிடுவது என்ற நமது நிலையை மறு ஆய்வு செய்வது.
பிஎஸ்எம்-உடன் அதன் எல்லா இடங்களிலும் மும்முனைப் போட்டிக்கான சாத்தியத்தை பக்காத்தான் ராக்யாட் உருவாகியுள்ளதால் ஏற்பட்டுள்ள நடப்பு மாற்றத்தை விவாதிப்பது, பக்காத்தானுடனான உறவுகளை விவாதிப்பது.
சில பகுதிகளில் பிஎஸ்எம் சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட விரும்பும் பிஎஸ்எம் அல்லாத
உறுப்பினர்கள் பெரும்பாலும் டிஏபி, பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை விவாதித்து முடிவு செய்வது. இது வரை 10 வேண்டுகோட்கள் வந்துள்ளன- அவற்றில் இரண்டு சபாவிலிருந்தும் ஒன்று பேராக்கிலிருந்தும் மூன்று நெகிரி செம்பிலானிடமிருந்தும் நான்கு சிலாங்கூரிலிருந்தும் வந்துள்ளன.
கேமரன் ஹைலண்ட்ஸ்-ல் நமது சொந்த வேட்பாளரை நிறுத்துவதற்கு கேமரன் பிஎஸ்எம்-மும் சுற்றுச்சூழல் போராட்ட அமைப்புக்களும் விடுத்துள்ள வேண்டுகோளை விவாதிப்பது.