‘தொகுதிகள் மீது சர்ச்சை இருந்தாலும் பக்காத்தான் உறவுகள் ஆழமானவை’

anwar13வது பொதுத் தேர்தலுக்கான தொகுதிகள் மீது பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் எழும்  சிறிய சர்ச்சைகளை அந்தக் கூட்டணியின் உயர் தலைமைத்துவம் தணித்து விடும். இவ்வாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.

புதிய மலேசியாவைக் காண்பதற்கான இலட்சியமும் நோக்கமும் ‘நிக் அஜிஸ், ஹாடி அவாங், கிட் சியாங்,  அன்வார்’ ஆகியோருக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

பக்காத்தான் எதிர்நோக்கும் ஒவ்வொரு சவாலையும் சமாளித்து வெற்றி கொள்ளும் போது அந்த இணக்கம், மேலும் வலுப்படுகிறது என்றும் அன்வார் குறிப்பிட்டார். அவர் நேற்றிரவு கோப்பெங்கில் 10,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார்.

“தொகுதிகள் மீது அங்கும் இங்கும் சிரமங்கள் இருப்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உயர்  தலைமைத்துவத்திற்கு இடையில் உறவுகள் தொடர்ந்து வலுவடைகின்றன.”

anwar2அதனை மனதில் கொண்டு புதிய மலேசியாவைக் காண விரும்பும் எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு முழு ஆதரவு  அளிக்குமாறு அன்வார் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் மீண்டும் சந்தித்து சிறிய பிரச்னைகளை விவாதிக்கப் போகிறோம். எங்களுடைய பெரிய இலட்சியம் விட்டுக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளும் போக்கை பின்பற்ற வைக்கிறது.”

“அதனால் தான் நான் சொல்கிறேன், இந்த நாட்டை திரும்ப எடுத்துக் கொண்டு உங்களைப் போன்ற சிறிய  மக்களிடம் அதனைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்த நாடு உங்களுடையது, என்னுடையது,” என  அன்வார் மேலும் கூறினார்.

கோப்பெங் பேராக்கில் பெரிய நாடாளுமன்றத் தொகுதியாகும். அதில் 100,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள்  உள்ளனர். அதன் நடப்பு பிகேஆர் எம்பி டாக்டர் லீ பூன் சாய் அங்கு மீண்டும் நிறுத்தப்படுகிறார்.