பிஎஸ்எம் பக்காத்தான் சின்னங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளது; ஆனால்…

PSMபுத்ராஜெயாவிலிருந்து பிஎன் -னை விரட்டும் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் உணர்வுடன் பிஎஸ்எம் என்ற Parti  Sosialis Malaysia சமரசத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது- பக்காத்தன் ராக்யாட்டில் உள்ள எந்தக் கட்சியின்  சின்னத்திலும் தனது வேட்பாளர்களை அது நிறுத்தும்.

பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் அதனை இன்று காலை அறிவித்தார். 2008ல் தான்  களமிறங்கிய நான்கு தொகுதிகளிலும் கட்சி போட்டியிடும் என்றும் அவர் சொன்னார்.

அந்த இடங்களுக்கு வழி விட பக்காத்தான் மறுக்குமானால் தனது சொந்த சின்னத்தில் வேட்பாளர்களை
நிறுத்தும் தனது பழைய முடிவுக்குத் திரும்பும் என்றார் அவர்.

செமினி, கோத்தா டமன்சாரா, சுங்கை சிப்புட், ஜெலெபாங் ஆகியவை அந்தத் தொகுதிகளாகும்.

பிஎஸ்எம் கட்சியின் தேசியக் குழு நேற்றிரவு அவசரமாக கூடிய போது அந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அருட்செல்வன் சொன்னார்.

“இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டியை விரும்பாத மக்கள் உணர்வையும் நாங்கள் கருத்தில் கொண்டோம்,”  என்றும் அவர் கூறினார்.

கேமிரன் ஹைலண்ட்ஸிலும் பக்காத்தான் உறுப்பினர்கள் பிஎஸ்எம் சின்னத்தில் போட்டியிட விருப்பம்
தெரிவித்துள்ள 10 இதர தொகுதிகளிலும் களமிறங்குவது பற்றி தான் விவாதிக்கப் போவதாக நேற்று பிஎஸ்எம்  அறிவித்தது.

TAGS: