சிகாமட்டில் முழு அமைச்சருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும் என்கிறது மஇகா( விரிவாக)

MICசிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் ‘சாதாரண மனிதரை’ காட்டிலும் முழு அமைச்சருக்கு அதிகமான வலிமை உண்டு என மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார்.

தமது கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம், ஜோகூர் பிகேஆர் தலைவரும் முன்னாள்  சுகாதார அமைச்சருமான சுவா ஜுய் மெங்-கை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் தமது சிகாமட் இடத்தை  அவர் தக்க வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதாக பழனிவேல் கருதுகிறார்.

“முழு அமைச்சருக்கு எப்போதும் ஆதரவு அதிகமாக இருக்கும். பதவி எப்போதும் முக்கியமானது,” என
சுவா-வை ‘சாதாரண’ மனிதர் எனக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்.

சிகாமட் தொகுதியில் உள்ள சீன வாக்காளர்களில் 30 விழுக்காட்டினர் சுப்ரமணியத்தை ஆதரிப்பர் என்றும்
பழனிவேல் கூறிக் கொண்டார். அத்துடன் அவர் பிஎன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.சுப்ரா

2008ம் ஆண்டு சுப்ரமணியம் டிஏபி-யின் பாக் ஹொக் லியோங்கை 2,991 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார். சிகாமட் தொகுதியில் 46 விழுக்காட்டினர் சீன வாக்காளர்கள் ஆவர்.

ஜோகூரில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடும். கம்பிர், காஹாங், தெங்காரோ, புத்ரி வாங்சா ஆகியவை அந்தத் தொகுதிகளாகும்.

உதவித் தலைவர் எஸ்கே தேவமணி வசம் நீண்ட காலமாக இருக்கும் நாடாளுமன்றத் தொகுதியான கேமிரன் ஹைலண்ட்ஸில் தாம் போட்டியிட வேண்டும் என்ற கட்சியின் முடிவு “வேறு ஒருவரால்” எடுக்கப்பட்டது என்றும் பழனிவேல் தெரிவித்தார்.

“தொடக்கத்தில் நான் சுங்கை சிப்புட்-க்கு செல்ல விரும்பினேன். ஆனால் பின்னர் கேமிரன் ஹைலண்ட்ஸை தேர்வு செய்தேன்,” என அவர் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

சுப்ரா1பிஎஸ்எம் பிரச்னை அல்ல’

சுங்கை சிப்புட்டில் பிஎஸ்எம் என்ற Parti Sosialis Malaysia வேட்பாளரும் நடப்பு எம்பி-யுமான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தொடுக்கக்கூடிய சவாலை பழனிவேல் கடுமையாக எடுத்துக் கொள்ளவில்லை.

“பிஎஸ்எம் பிரச்னை அல்ல. மற்ற எந்தக் கட்சி போட்டியிட்டாலும் நான் கவலைப்படுவேன். ஆனால் பிஎஸ்எம் பிரச்னை இல்லை,” என்றார் அவர்.

2008 தேர்தலில் அப்போதைய மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவை ஜெயகுமார் 1,821 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்ததின் மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.சுப்ரா2

இப்போது அந்தத் தொகுதிக்கான பிஎன் ஒருங்கிணைப்பாளராக சாமிவேலு சுங்கை சிப்புட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த இடத்தை பிஎன் மீண்டும் பிடிப்பதற்கு அவர் தேவமணிக்கு உதவி வருகிறார். 

பேராக்கில் பாசிர் பாஞ்சாங், பெஹ்ராங் ஆகிய தொகுதிகளை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்த பின்னர் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிடும்.

அதற்குப் பதில் அது புந்தோங், ஜெலாபாங், ஹுத்தான் மெலிந்தாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் களமிறங்கும்.

கேமிரன் ஹைலண்ட்ஸ் தொகுதியில் உள்ள மசீச, கெராக்கான் கிளைகளுக்கு இடையில் சர்ச்சை நிலவிய போதிலும் அந்தத் தொகுதியில் தாம் வெற்றி பெற முடியும் என பழனிவேல் உறுதியாக நம்புகிறார்.

“நான் அங்கு பிரச்னைகளைத் தீர்த்துள்ளேன். ஆகவே எனக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்,” என அவர் சொன்னார்.