டிஏபி: ஐந்து பிஎன் வேட்பாளர்கள் போலியான பட்டங்களை வைத்துள்ளனர்

BNஐந்து பிஎன் வேட்பாளர்களுடைய கல்வித் தகுதிகள் குறித்து டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங்  கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பட்டங்கள் கேள்விக்குரிய அந்நிய கல்வி நிலையங்கள் வழங்கியவை என  அவர் கூறிக் கொண்டார்.

இரண்டு நாடாளுமன்ற, மூன்று சட்டமன்ற வேட்பாளர்களைப் பெயர் குறிப்பிட்ட அவர், போலியான  பல்கலைக்கழகங்களின் பட்டங்களை வைத்துள்ளதாக கூறப்படும் அத்தகைய வேட்பாளர்கள் பட்டியலில்  இருக்கும் போது “ஆற்றல் மிக்க, திறமையான, முற்போக்கான” அணியைப் பெற்றுள்ளதாக பிஎன் எப்படிக்  கூறிக் கொள்ள முடியும் என வினவினார்.

சிலாங்கூர் பிஎன் வேட்பாளர் பட்டியலை நேற்று சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்
கோலாகலமான நிகழ்வின் போது அறிவித்தார்.bn1

சிலாங்கூர் பிஎன் வேட்பாளர்கள் “பொருளாதார உருமாற்றத் திட்டத்துக்கு இணங்க சிலாங்கூர் மாநிலத்தை  மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு பல்வேறு துறைகளில் தகுதி பெற்ற ஆற்றல் மிக்க,  திறமையான, முற்போக்கான தனி நபர்கள்” என மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் கூட  கூறியுள்ளதாக ஒங் சொன்னார்.

“பட்டங்களை வெளியிடும் ஆலைகள்” என வருணிக்கப்படும் கல்விக்கூடங்களின் கல்வித் தகுதிகளை இரண்டு  நாடாளுமன்ற வேட்பாளர்களும் மூன்று சட்ட மன்ற வேட்பாளர்களும் பெற்றுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை  அளிக்கிறது. ஒரு கட்டணத்துக்காக போலி பட்டங்களையும் வெளியிடும் போலி பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகளே அந்த ‘பட்டங்களை வெளியிடும் ஆலைகள்’ ஆகும்,” என ஒங் மேலும் கூறினார்.