கனி: மந்திரி புசார் பதவியை முடித்துகொள்வதில் பரம திருப்தி

1ghaniஜோகூர் மந்திரி  புசார் அப்துல் கனி ஒத்மான், தம்  அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத்தான்  அம்னோ தம்மை கேலாங் பாத்தாவில் களமிறக்குவதாக டிஏபி கூறிக்கொள்வதை மறுக்கிறார்.

தாம் கேலாங்  பாத்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து  டிஏபி அவ்வாறு கூறுவதில் உண்மையில்லை என்றாரவர். கனி, இன்று ஜோகூர் பாரு தங்குவிடுதி ஒன்றில் மசீச வேட்பாளர்கள் மூவருக்கு நியமனக் கடிதங்களைக் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

1ghanie2நேற்றிரவு கூலாயில் ஒரு செராமாவில் பேசிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அம்னோ தலைமை கனியை ஒழிக்கும் நோக்கில்தான் அவரை கேலாங் பாத்தாவில் தம் தந்தையார் லிம் கிட் சியாங்குக்கு எதிராகக் களமிறக்குவதாகக் கூறினார்.

“கனி இனி தேவை இல்லை என்று அம்னோ முடிவுகட்டிவிட்டது. அவருக்கும் (பிஎன் துணைத் தலைவர்) முகைதினுக்கும் ஒத்துப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். கனியை ஒழித்துக்கட்ட முகைதின் நீண்டகாலமாகவே காத்திருந்தார்.

“கனிக்கு சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ போட்டிபோட இடம் கிடைக்கவில்லை. அதனால் (மசீச தலைவர் டாக்டர்) சுவா சொய் லெக்கை அணுகினார். அவர் ‘இதோ இருக்கிறது கேலாங் பாத்தா’ என்றார்.

“இந்த மசீசவுக்கு தரம் என்பதே கிடையாது. அம்னோ விரும்பாத ஒருவரை அது சேர்த்துக்கொள்கிறது. வெட்கக்கேடு. ஏனென்றால், சுவாவுக்கு (கேலாங் பாத்தாவில்) போட்டியிட துணிச்சல் இல்லை”, என்று குவான் எங் கூறினார்.

கனி, இன்று காலை மாநில முதல்வர் பதவியை முடித்துக்கொள்வதில் திருப்தி கொள்வதாகக் கூறினார்.

1 ghanie 1“நான்கு தவணைகளுக்கு இருந்து விட்டேன். இந்த நான்கு தவணைகளில் என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன். இனி, மற்றவர்கள் அதைத் தொடர்வார்கள் என்று மகிழ்ச்சி அடைகிறேன்”.

ஆனால், கனி பிஎன் அம்மாநிலத்தைத் தக்கவைத்துக்கொண்டால் அடுத்த மந்திரி புசார் யாராக இருக்கும் என்பது பற்றிக் கருத்துரைக்க மறுத்தார்.

பராமரிப்பு அரசாங்கத்தில் உயர்கல்வி அமைச்சராகவுள்ள காலிட் நோர்டின்- பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுபவர்- அடுத்த மந்திரி புசார் ஆவார் என்று ஊகிக்கப்படுகிறது.

 ‘ஜோகூர் பாணியில் தற்காப்போம்’-கனி

“ஜோகூரில் நிலவும் புரிந்துணர்வையும் ஒற்றுமையும் உடைக்கும் முயற்சியில் மாற்றரசுக் கட்சி இறங்கியுள்ளது.  எல்லா இனங்களும் சேர்ந்து அதைத் தற்காக்க வேண்டும்…..”, என்றாரவர்.

1ghanie313வது பொதுத் தேர்தலில் மாற்றரசுக் கட்சியின் தந்திரங்களில் சிக்கி ஜோகூர் சமுதாயத்தைச் சிதைக்கும் அதன் திட்டத்துக்குத் துணை போகக்கூடாது, என்றவர் கேட்டுக்கொண்டார்.

வெளியாருக்கு எதிராக ஜோகூர் மக்களை ஒன்றிணைப்பதற்கு ‘ஜோகூர் பாணி’ என்று சொல்வது ஜோகூர் பிஎன் தலைவர்களின் வழக்கமாகும்.

ஜோகூரில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் குறிப்பாக தாய்மொழிக் கல்வி மேம்பாட்டில், நியாயமான சலுகைகள் கொடுக்கப்பட்டு வந்திருப்பதாக பிஎன் கூறிக்கொள்கிறது.

அதனால்தான் கடந்த தேர்தலில் தீவகற்பத்தின் வடக்கு பகுதியிலும் மத்திய பகுதியிலும் ஏற்பட்ட ‘அரசியல் சுனாமி’யால் ஜோகூர் பாதிக்கப்படவில்லை. அங்கு 63 வாக்குகள் பிஎன்னுக்கு ஆதரவாக விழுந்தன என்றது கூறுகிறது.