கனி டாக்டர் மகாதீருடைய ‘பிரதிநிதியாக’ செயல்படுகிறார் என கிட் சியாங் குற்றம் சாட்டுகிறார்

Ghaniவரும் பொதுத் தேர்தலில் தம்மைப் ‘புதைப்பதற்கு’ முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வகுத்துள்ள  திட்டத்திற்கு பிரதிநிதியாக கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் தம்மை எதிர்க்கும் அப்துல் கனி  ஒஸ்மான் செயல்படுவதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குற்றம் சாட்டியுள்ளார்.

தமக்கு எதிராக கனி நிறுத்தப்படுவது, ‘மகாதீர் தத்துவத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் மிகத்  தெளிவான முறையான முயற்சி என்றும் லிம் கூறிக் கொண்டார்.

செரோம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து டிஏபி மூத்த தலைவரை எதிர்க்க கேலாங் பாத்தா தொகுதிக்கு
மாற்றப்பட்டுள்ள கனி ‘ மகாதீர் தத்துவத்தின் உருவாக்கம்’ என அந்த நடப்பு ஈப்போ தீமோர் எம்பி இன்று
விடுத்த அறிக்கையில் சொன்னார்.

“கேலாங் பாத்தாவில் என்னைப் ‘புதைப்பதற்கான திட்டத்தில் கனி மகாதீருடைய பிரதிநிதி ஆவார்.
மலேசியாவில் மகாதீர் தத்துவம் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிக்கு எடுத்துக் காட்டு.”

ஏழு பொது விவாதங்களை தம்முடன் நடத்த வருமாறும் லிம், கனிக்கு அழைப்பு விடுத்தார். வேட்பாளர் நியமன  நாளான ஏப்ரல் 20ம் தேதிக்கு முன்னர் முதல் விவாதம் நடக்கலாம். 13வது பொதுத் தேர்தல் ஜோகூருக்கும்  மலேசியாவுக்கும் முக்கியமானது என்னும் தலைப்பில் அந்த விவாதங்கள் நிகழலாம் என்றும் லிம் சொன்னார்.