பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கூடுகிறது

BN Penangபினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து விடுபட்ட மூன்று பிஎன் தலைவர்கள் தங்கள் ஆத்திரத்தைக்  கொட்டி தீர்த்ததைத் தொடர்ந்து மே 5 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட  வேட்பாளர்களுக்கு மேலும் பல பினாங்கு பிஎன் உறுப்புக் கட்சிகளின் தொகுதிகள் ஆட்சேபம்  தெரிவித்துள்ளன.

கெராக்கானைச் சேர்ந்த பிஎன் மாச்சாங் பூபோக் ஒருங்கிணைப்பாளர் ஊய் சுவான் ஹோ, பினாங்கு மஇகா
இளைஞர் தலைவர் ஜே தினகரன் ஆகியோர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிடுவது  பற்றிச் சிந்திப்பதாக சொல்லப்படுகின்றது.

வேட்பாளர்களாக பரிசீலிக்கப்படாத அல்லது கைவிடப்பட்ட அம்னோ தலைவர்களுடைய ஆதரவாளர்கள்
நேற்று கெப்பாளா பத்தாஸ், செபராங் ஜெயா, பாகான் டாலாம் ஆகியவற்றில் மூன்று ஆர்ப்பாட்டங்களை
நடத்தினர்.

பட்டியலில் தாங்கள் விரும்பும் வேட்பாளர்கள் இடம் பெறாததால் கட்சித் தொண்டர்கள் அடைந்துள்ள
அதிருப்தியால் பினாங்கைச் சுற்றிலும் உள்ள அம்னோ நடவடிக்கை மய்யங்களில் 70 விழுக்காடு இயங்கவில்லை  எனத் தெரிய வந்துள்ளது.

பாலிக் புலாவ், பாயான் பாரு, நிபோங் தெபால், பெர்மாத்தாங் பாவ், தாசேக் குளுகோர் நாடாளுமன்றத்
தொகுதிகளில் உள்ள மய்யங்களும் அவற்றுள் அடங்குக் என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது முடிவை தொடர்பு கொள்ளப்பட்ட போது உறுதி செய்ய ஊய் மறுத்து விட்டார். என்றாலும் தலைநிலத்தில்  உள்ள இளம் அரசியல்வாதிகளுக்கு கட்சித் தலைமைத்துவம் நியாயம் செய்யவில்லை என அவர் கருதுவதாக  அவருக்கு அணுக்கமான வட்டாரங்கள் கூறின.

“வரும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதி இல்லாத தங்கள் சேவகர்களை அவர்கள் வான்குடை வழி
கொண்டு வந்துள்ளனர். எங்களுடைய கடின உழைப்பை அவர்கள் அலட்சியம் செய்துள்ளனர்,” என ஒரு
வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

பிராயில் போட்டியிடுவதற்கு தமக்கு வாய்ப்பளிக்க சில கட்சிகள் முன் வந்துள்ளதாக தொடர்பு கொள்ளப்பட்ட
போது தினகரன் சொன்னார். தாம் அதனைப் பரிசீலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பினாங்கு வேட்பாளர்
பட்டியல் குறித்து அவரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.thinakaran

‘பிஎன் பட்டியலில் ஏமாற்றம் அடைந்துள்ள என் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் எனக்கு நெருக்குதல்  கொடுக்கின்றனர்.”

“தலைமைத்துவம் தேர்வு செய்தவர்களில் சிலர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிஎன் சட்டையைக் கூட  அணிந்ததும் இல்லை. களத்தில் இறங்கி வேலை செய்ததும் இல்லை. ஆனால் அவர்கள் இன்று வேட்பாளர்கள்  எனத் தினகரன் கூறினார்.