நஜிப் நேர்மை வாக்குறுதியை மீறியதாக வெளிப்படைக் கழகம் கூறுகிறது

TI-Mபிஎன் தலைவர் நஜிப் ரசாக், பல்வேறு சலுகைகளை வழங்கியதின் மூலமும் தம்மை ஆதரிக்குமாறு அரசு  ஊழியர்களைக் கேட்டுக் கொண்டதின் மூலமும் தாம் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதியை மீறியுள்ளதாக மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் கூறியுள்ளது.

அது சுட்டிக் காட்டியுள் சில விஷயங்கள்:

2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மலேசியா சலுகைக் கார்டான கழிவுக் கார்டு
725,000 அரசாங்க ஓய்வூதியக்காரர்களுக்கும் விரிவு செய்யப்படுவதாக நஜிப் ஏப்ரல் 8ம் தேதி அறிவித்தார்

பேராக்கில் 400 மில்லியன் ரிங்கிட் வளாகம் ஒன்று கட்டப்படும் என பிஎன் தலைவர் ஏப்ரல் 9ம் தேதி
அறிவித்தார்.

புத்ராஜெயாவில் இன்று குடியிருப்பாளர்களுக்கு தாங்கக் கூடிய விலையில் சிறப்பு வீடமைப்புத் திட்டம் ஒன்றைத்  தொடக்கி வைத்த நஜிப் ரசாக் 2013 தேர்தலில் வெற்றி பெற தமக்கு உதவுமாறு அரசு ஊழியர்களைக் கேட்டுக்  கொண்டார்.

“வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பணத்தை பயன்படுத்துவது இப்போது
ரகசியமல்ல. தேர்தல் செலவுகள் பனிப்பாறையின் நுனியைப் போன்றது எனக் கூறப்பட்டுள்ளது. நுனி மட்டுமே  கண்ணுக்குத் தெரியும்.”

“ஆனால் அந்த நுனி கூட தேர்தல் ஆணையத்துக்கும் (இசி) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும்
தென்படவில்லை. பண அரசியல் மீது நடவடிக்கை எடுக்க அவை தவறி விட்டன,” என்று மலேசிய
அனைத்துலக வெளிப்படைக் கழகத் தலைமைச் செயலாளர் ஜோஷி எம் பெர்ணாண்டஸ் கூறினார்