பிஎஸ்எம் வேட்பாளர்கள் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் கொடுக்கப்படும்

1psmபிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியிலும் அதன் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் டி.ஜெயக்குமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் தனது சின்னத்தின்கீழ் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் வரையப்பட்டிருப்பதாக பிகேஆர் நேற்றிரவு அறிவித்தது.

1psm1பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அக்கடிதங்களை அவர்களிடம் வழங்குவார் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

“எங்களின் ஒரே நிபந்தனை இதுதான் – பிஎஸ்எம் எந்த இடத்திலும் பக்காத்தான் ரக்யாட்டுக்கு எதிராக மும்முனைப் போட்டியில் இறங்கக்கூடாது”. சைபுடின் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

பிகேஆரும் பிஎஸ்எம்-மும் நடத்திய பேச்சுகளில் 2008-இல் அவர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட மூன்று இடங்களில் இரண்டை வைத்துக்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது என்றவர் கூறினார். பிஎஸ்எம் சுங்கை சிப்புட்டிலும் கோத்தா டமன்சாராவிலும் வென்றது, செமிஞியில் தோற்றது.