தேர்தல் சீர்திருத்த போராளியை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்

wongபொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுவது, பாரோங் (Pacaba) ஆகியவற்றுக்கு  முகவர்களாக பணியாற்றுவதற்குக் கட்சித் தொண்டர்களுக்கு Tindak Malaysia பயிற்சி அளித்து வருவது  தொடர்பிலான குற்றச்சாட்டு எனக் கூறப்படுவதின் தொடர்பில் தேர்தல் சீர்திருத்த போராளியான பிஒய்  வோங்கை போலீஸ் இன்று விசாரணைக்கு அழைத்தது.

அரசு சாரா அமைப்பான Tindak Malaysia அமைப்பை தோற்றுவித்தவரான வோங் இன்று காலை 9 மணி
தொடக்கம் இரண்டு மணி நேரத்துக்கு மேல் புக்கிட் அமான் கூட்டரசு போலீஸ் தலைமையகத்தில்  விசாரிக்கப்பட்டார்.

அவர் குற்றவியல் சட்டத்தின் 124வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.

வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தும் போது வாக்குச் சீட்டுக்களைக் கொண்ட தொகுப்பிலிருந்து
தேர்தல் அதிகாரி எடுத்துக் கொடுக்கும் வாக்குச் சீட்டுக்கு பதில் தற்செயலாக ( Random) எடுக்கப்பட்ட வாக்கு சீட்டைக் கோர வேண்டும் என தான் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் Tindak Malaysia வலியுறுத்தி வருகின்றது.  வாக்காளர்களுடைய வாக்குகள் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்கு அது உதவும் என்றும் அது  கூறியுள்ளது.