2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பலர் வேறு கட்சிக்கு மாறியதால் ஏற்பட்ட தாக்கத்தை உணர்ந்துள்ள பிகேஆர், கட்சித் தாவல்களைத் தடுக்கும் பொருட்டு எல்லா வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கட்சி மாறினால் 5 மில்லியன் ரிங்கிட்டைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
“நியமனக் கடிதங்களைப் பெற்ற பின்னர் வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னதாக அல்லது
(தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்) கட்சி மாறினாலோ அவர்கள் கட்சிக்கு 5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும். (ஆகவே) அவர்கள் Akujanji கடிதத்தில் கையெழுத்திட வேண்டும்,” என பிகேஆர் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் கூறினார்.
“நீங்கள் நியமனக் கடிதத்தைப் பெற விரும்பினால் நீங்கள் திரும்பிச் செல்வது என்பது கிடையாது,” என அவர், ஜோகூர் பாருவில் இன்று பல ஜோகூர் பிகேஆர் வேட்பாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.