டிஏபியைச் சேர்ந்த இருவர் நீக்கப்படலாம்

1 dapleeடிஏபி உறுப்பினர்கள் பொதுத் தேர்தலில் சுயேச்சைகளாக போட்டியிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்று கட்சி கட்டொழுங்குக் குழுத் தலைவர் டான் கொக் வாய் கூறினார்.

இது கட்சித் தலைமையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்றாரவர்.

கட்சிநீக்கம் செய்யப்பட்டவர்கள், கட்சி சட்டவிதிகளின்படி 14 நாள்களுக்குள் அம்முடிவுக்கு எதிராக முறையிடலாம்.

ஜெனிஸ் லீ (மேலே உள்ளவர்), தெராதாய் சட்டமன்றத் தொகுதியிலும் சிம் தொங் ஹிம், கோட்டா லக்‌ஷமணா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவது பற்றி மலேசியாகினி தொடர்புகொண்டு வினவியபோது டான் இவ்வாறு கூறினார்.

1 dap simசிம் (படத்தில் நடுவில் இருப்பவர்) கோட்டா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியிலும் களமிறங்குகிறார். ஆனால் அங்கு அவர் டிஏபி சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.

சிம்மை நீக்கினால் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை இழக்க நேருமே என்றதற்கு வேறு வழியில்லை, நீக்கத்தான் வேண்டும் என்று டான் கூறினார்.

லீயிடம் அவர் கட்சிநீக்கம் செய்யப்படும் அபாயம் இருப்பது பற்றிக் கேட்டதற்கு இப்போதுள்ள மத்திய நிர்வாகக் குழுவால் அவ்வாறு செய்ய இயலாது என்று குறிப்பிட்டு சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தால் (ஆர்ஓஎஸ்) அது இரத்துச் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். .

இதன் தொடர்பில் டானிடம் வினவியதற்கு கட்சிநீக்கம் செய்யப்படுவதை எதிர்க்கும் உரிமை லீ-க்கு உண்டு என்றார்.