பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளர் அப்துல் கனி ஒஸ்மான் அந்தத் தொகுதி மக்களுக்கு விடுத்துள்ள முதல் செய்தியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் ‘இன ரீதியாக ஒன்று கூடும்’ பக்காத்தான் போக்கை எதிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஜோகூர் பாணியை முறியடிப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகத்தை இன ரீதியாக
பிளவுபடுத்தும் முயற்சிகளை வாக்காளர்கள் முறியடிக்க வேண்டும்,” என ஜோகூர் பாரு தெங்கா மாநகராட்சி
மண்டபத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் கனி நிருபர்களிடம் பேசினார்.
இன ரீதியாக ஒன்றுபடும் போக்கை விவரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது இன அடிப்படையில்
அரசியல் ஆதரவை ஒன்றுபடுத்தும் போக்கு என அவர் சொன்னார்.
“சமூகம் இன ரீதியில் வாக்களிக்கும் நிலை ஏற்படாது என நான் நம்புகிறேன். ஜோகூரில் அத்தகைய அனுபவம்
இல்லை. 2008ல் பிஎன் எல்லா இனங்களுடைய ஆதரவுடன் தொகுதிகளைத் தற்காத்துக் கொண்டது.”
“இன ரீதியாக ஒன்றுபடும் அத்தகைய முயற்சிகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். (இன
அடிப்படையிலான ஆதரவு என்பதே அதன் பொருளாகும்)
“வெளி ஆட்களுடைய’ பிளவு அரசியல் எனக் கூறப்படுவதற்கு எதிராக ஜோகூர் மக்களை ஐக்கியப்படுத்த
ஜோகூர் பிஎன் தலைவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொல் ‘ஜோகூர் பாணியாகும்’. எல்லா இனங்களும் பிஎன்
-னுக்கு ஆதரவு அளிக்கின்றன என்பதை அது பொதுவாகக் குறிப்பிடுகின்றது.
மாநில அரசாங்கம் ஜோகூரில் உள்ள சீன, இந்திய சமூகங்களை நியாயமாக குறிப்பாக தாய்மொழிக் கல்வி
மேம்பாட்டில் நடத்துகின்றது என பிஎன் கூறிக் கொள்கிறது.