இசி என்ற தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் தமது பெயர் இடம் பெறாதது குறித்து டிஏபி ஸ்ரீ தஞ்சோங் வேட்பாளர் சான் பூங் ஹின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நேற்று காலையில் சான் -உடைய வேட்பாளர் நியமனத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்ட போதும் பெயர்
விடுபட்டுள்ளது.
தேர்தல் அதிகாரியுடன் தொடர்பு கொண்ட தமது தேர்தல் முகவரிடம் அது ‘தொழில்நுட்பக் கோளாறு’ என அவர் சொன்னார்,” என ‘அதிர்ச்சி’ அடைந்துள்ள சான் சொன்னார்.
“வேட்பாளர் நியமன மய்யத்தில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் எந்தப் பிரச்னையும் இருக்காது என
அந்த தேர்தல் அதிகாரி தெரிவித்தார்”
“தொலை நகல் அல்லது இணையத் தொடர்பு பிரச்னைகள் காரணமாக இருக்கும்,” என்றும் அந்த அதிகாரி
குறிப்பிட்டார்.
எனினும் இன்று காலை 11.30க்கு இசி வேட்பாளர் பட்டியலை சோதனை செய்த போது சான் பெயர் தாவாவ் நாடாளுமன்றத் தொகுதிக்குள் ஸ்ரீ தஞ்சோங் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. நாளைக்குள் தமது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறா விட்டாக் அதிகாரத்துவப் பதிலைக் கோரி சட்ட
ரீதியாக கடிதம் அனுப்பப் போவதாக சான் கூறியிருந்தார்.
“வேட்பாளராக முன்மொழியப்பட்ட ஒருவர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பட்டியலிலிருந்து விடுபடுவது முற்றிலும் ஜனநாயகத்துக்குப் புறம்பானது,” என்றும் அவர் கருதுகிறார்.
அந்தத் தொகுதியில் 2008ல் பிகேஆர், பிஎன் வேட்பாளர்களை டிஏபி வேட்பாளர் 1,172 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.