இசா, ஆயிஷாவை அரசியல் எதிரியாகத்தான் பார்க்கிறார், பாடகராக அல்ல

isaஜெம்போலில் தம்மை எதிர்க்கும் வேட்பாளர் பெரும் புகழ்பெற்றவராக இருக்கலாம் ஆனால் அதைக்கண்டு  அம்னோவின் முகம்மட் இசா சமட் அஞ்சப்போவதில்லை.

அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் புகழ்பெற்ற பழைய பாடகி ஆயிஷா. அவரது இயற்பெயர் வான் அயிஷா வான் அரிபின்.

“அவர் (ஆயிஷா) ஒரு பாடகரோ, உஸ்தாஸோ, ஆசிரியரோ, வழக்குரைஞரோ அது அவரது தொழில். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

1isa1“இங்கே ஒரு கட்சிக்கும் இன்னொரு கட்சிக்குமிடையில்தான் போட்டி. அதாவது அம்னோவாகிய நாங்கள் பாஸுடன் மோதுகிறோம். பாஸ் பல பிரச்னைகளைக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும்”, என்றாரவர். பாஸ்மீது முஸ்லிம்களுக்கும் அக்கட்சி உறுப்பினர்களுக்கும் நம்பிக்கை குறைந்து வருவதாக அவர் சொன்னார்.

நேற்றுக் காலை வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஜெம்போல் மாவட்ட, நில அலுவலக வளாகத்தில்  செய்தியாளர்களிடம் நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புச்ரான இசா பேசினார்.

 

‘பக்காத்தான் விவகாரங்களை வைத்தே பிழைப்பு நடத்துகிறது’

1isa2அவர் பாடகி ஆயிஷாவின் ரசிகரா என்று வினவியதற்கு தாம் 60’ஆம் ஆண்டுப் பாடல்களை மட்டுமே இரசிப்பவன் என்றார்.

ஜெம்போலில், போட்டியிடும் எல்லா இடங்களையும் பிஎன் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாகத்தின் (பெல்டா) தலைவரான இசா பக்காத்தான் “விவகாரங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும்” கட்சி என்றார்.

 

கடந்த ஐந்தாண்டுகளில் “பிரச்னைக்குமேல் பிரச்னையைத் தூண்டிவிட்டு” வந்திருக்கிறார்களே தவிர  “சிறந்த கருத்துகளை”த் தெரிவித்ததே இல்லை என்றவர் சாடினார்.

தேர்தலில் பிஎன் வென்றால், இசா மீண்டும் மந்திரி புசார் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்பு நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்த அவர் 2004-இல் கூட்டரசு பிரதேச அமைச்சராக்கப்பட்டார். ஆனால், ஓராண்டு கழித்து கட்சித் தேர்தலில் வாக்குகளை விலைகொடுத்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு அவர் அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.