இத்தனை சுயேச்சைகள் நாட்டுக்குச் சேவை செய்யத்தான் போட்டியிடுகிறார்களா?

1 ysayஉங்கள் கருத்து ‘தங்களால் வெற்றிபெற முடியும் என்பதைத் தத்தம் கட்சிகளுக்குத் காண்பிக்க விரும்புகிறார்கள். அதுதான் போட்டியிடுகிறார்கள். ஆனால், சுயேச்சைகள் வெற்றிபெறுவது அரிதினும் அரிது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது’

தேர்தலில் நூற்றுக்கணக்கில் சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்

ஜேஎம்சி: 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடந்தேற பிரார்த்தனை செய்வோம்.

ஏதாவது குழப்படிகள் நடந்து ஜனநாயக நடைமுறை தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது. ஏனென்றால், பிஎன் எதையும் செய்யக்கூடியது.

சட்டங்களை மதிப்போம்.  தேர்தலின்போது நீதியும் அமைதியும் ஆட்சிசெய்ய அருளுமாறு இறைவனை வேண்டிக்கொள்வோம்.

பெயரிலி _4031:  தேர்தல் ஆணையத்தின் (இசி) கூற்றுப்படி இப்பொதுத் தேர்தலில் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் 269 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட ரிம10,000 செலுத்த வேண்டும். சட்டமன்றத்துக்கு ரிம5,000.

இவர்கள் இவ்வளவு பணம் கட்டி போட்டியிடுவது எதற்கு? நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணுகிறார்களா அல்லது சொந்தத்துக்குச் சேவை செய்ய நினைக்கிறார்களா?

அவர்களை, அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் வெற்றிபெற முடியாதவர்கள் என்பது அக்கட்சிகளின் எண்ணம். எனவே, அவர்கள் தாங்கள் வெற்றிபெறக்கூடியவர்களே என்பதைத் தங்கள் கட்சிகளுக்கு நிரூபிக்க விரும்புகிறார்கள்.

ஆனால், சுயேச்சைகள் தேர்தலில் வெற்றிபெறுவது அரிதினும் அரிது என்பதைத்தான் வரலாறு காண்பிக்கிறது. சொல்லப்போனால், அவர்களில் பெரும்பாலோர் வைப்புத்தொகையையும் இழந்து விடுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் வழியாக அரசுக்கு ஒரு சிறு வருமானம் கிடைத்து விடுகிறது.

குட்டிஜாம்பவான்: சுயேச்சைகளில் 50 விழுக்காட்டினர் ஒரு வாரத்தில் தேர்தல் களத்திலிருந்தே காணாமல் போய்விடுவர். பக்காத்தான் பிஎன் இரண்டுமே இந்த “இடையூறுகளை”க் களையெடுக்க வேண்டும்.

சிரிப்பு:  கட்சியால் களமிறக்கப்படுவோர்மீதுதான் கவனம் செலுத்த வேண்டும். கட்சியால் கைவிடப்பட்டவர்களான ஜெனிஸ் லீ, சிம் தொங் ஹிம் போன்றோரை ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அவர்கள் என்னதான் நட்புறவாக பேசினாலும் பழகினாலும் அவர்களைக் கட்சி களமிறக்காததற்கு ஏதாவது காரணம் இருக்கும். அவர்கள் கட்சியுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்க பாடுபட வேண்டுமே தவிர தனித்து நிற்கக்கூடாது.  இது அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும். இது அவர்களின் தன்னலத்தைத்தான் காண்பிக்கிறது.

அஜிப்:  சீன ஆதரவாளர்கள், பாஸ் கொடிகளை ஏந்தி இருந்தார்கள். மலாய் ஆதரவாளர்களின் கைகளில் டிஏபி-இன் இராக்கெட் கொடி. இதுவல்லவோ உண்மையான 1மலேசியா உணர்வு. 55 ஆண்டுக்கால பிஎன் மூளைச்சலுவைக்கு  ஆட்பட்டிருந்த மக்கள் இன, சமய எல்லைகளைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.

இது ஒரு புதிய மலேசிய தலைமுறையின் உதயமாக அமையட்டும். முன்னிலும் வளப்பமான, முற்போக்கான நாட்டை உருவாக்கப் பாடுபடுவோம். அரசியல் தீவிரவாதிகளும் குறுகிய மனப்போக்குள்ளவர்களும் கபடதாரிகளும் அழிந்து போகட்டும்.