பெர்க்காசா தலைவர்களுடைய வேட்பாளர் நியமனத்தில் மகாதீருக்கும் பங்கு உண்டு

BNபிஎன், ஷா அலாமில் பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை நிறுத்தியிருப்பதும் பாசிர் மாஸில் பெர்க்காசா தலைவர்  இப்ராஹிம் அலிக்காக அது தேர்வு செய்த வேட்பாளர் விலகிக் கொண்டதும் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் “முழுமையான அதிகாரத்தை” வைத்துள்ளார் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

“அவர் ஒரு நாள் இப்ராஹிமை பிரதமராகவும் நியமிக்கக் கூடும்,” என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர்  லிம் கிட் சியாங் கூறிக் கொண்டார். அவர் இன்று காலை கேலாங் பாத்தாவில் நிருபர்களிடம் பேசினார்.

அம்னோ ஆதிக்கத்தில் மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகள் செயலற்று இருப்பதையும் பொருத்தமற்றதாக  இருப்பதையும் அந்த நிலை உணர்த்துவதை லிம் சுட்டிக் காட்டினார்.

“பிஎன் கூட்டணியில் 14வது அமைப்பாக இப்போது பெர்க்காசா திகழ்கிறது. மசீச, கெராக்கான், மற்ற பிஎன்  உறுப்புக் கட்சிகள் ஆகியவற்றின் நிலைப்பாடு என்ன ? பிஎன் -னில் அதிகாரப்பற்றற்ற கட்சியாக பெர்க்காசா  மாறியுள்ளதை அவை ஏற்றுக் கொள்கின்றனவா… ?”

TAGS: