‘என் குடும்பத்தை இழுக்க வேண்டாம்’; நுருல் இஸ்ஸாவுக்கு நொங் சிக் எச்சரிக்கை

1 rajaலெம்பா பந்தாயில் நுருல் இஸ்ஸாவை எதிர்க்கும் ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், தனிப்பட்ட விவகாரங்களைப் பொதுவில் விவாதிக்க வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளார்

“அவர் அண்மையில் என் தந்தை, என் மகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றிப் பேசியுள்ளார். அவற்றை நான் பல தடவை ஊடகங்களுக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறேன்”, என்றாரவர். ராஜா நொங்(வலம்) சிக் நேற்று பந்தாய் டாலாமில் புதையல் வேட்டை நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது செய்தியாளகளிடம் பேசினார்.

1 raja1“பரப்புரையில் தூய்மையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர் எதற்காக தனிப்பட்ட விவகாரங்களை இழுத்து அசிங்கமாக நடந்துகொள்ள வேண்டும்? அவருடைய தந்தை பற்றிய விவகாரங்களை நான் தொட்டதே இல்லை, அதைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்?”

பிகேஆரைச் சேர்ந்த எதிர் வேட்பாளருக்கு “குறைசொல்லத்தான் தெரியும் ஆனால், பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தெரியாது”, என்றார்.

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான அவரைத் தேர்தல் காலத்தில் மட்டும்தான் தொகுதியில் பார்க்க முடிவதாகவும் அவர் சொன்னார்.

“இதுவரை என்ன செய்திருக்கிறார் அவர்? இப்போதுதான் கடுமையாக உழைக்கிறார்; பார்க்க வெறுப்பாக இருக்கிறது”, என நொங் சிக் தெரிவித்தார்.

“அமைச்சராவதற்குமுன்பே இங்கே அடிக்கடி வருவேன், என்னால் முடிந்ததைச் செய்தேன். கோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்), மேம்பாட்டாளர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருடன் பேசுவேன்.

“லெம்பா பந்தாயில் உள்ள வாய்ப்புக் குறைந்தோருக்கு உதவிசெய்ய 200 தடவைக்குமேல் மாநராட்சி மன்றத்துக்குச் சென்றிருக்கிறேன்”.

‘இங்கேயே சாக விரும்புகிறேன்’

1 raja 2நுருல் இஸ்ஸா உண்மையாக நடந்துகொள்ளவில்லை என்று கூறிய நொங் சிக், அவருடைய இலவச மருத்துவ நிலையம்கூட அண்மைக்காலமாகத்தான் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது என்றார்.

“உண்மையிலேயே இலவச மருத்துவ பரிசோதனைகளை வழங்க விரும்பினால் ஏன் 2008-இலேயே  அதைத் தொடங்கவில்லை? இப்போது வாராவாரம் இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்துகிறார். லெம்பா பந்தாய் அவர் காலூன்றி நிற்பதற்கான ஒரு தளம். அவ்வளவுதான். இந்த இடத்தையோ இங்குள்ள மக்களையோ அவர் புரிந்து கொண்டவரல்ல.

“நிதிவசதி இல்லை என்பது ஒரு காரணமாகாது. எனக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாத காலத்தில்கூட நான் உதவி செய்து வந்துள்ளேன்.

“நுருலுக்கும் எனக்குமுள்ள வேறுபாடு என்னவென்றால் நான் இங்கேயே பிறந்தவன், திருமணம் செய்து கொண்டவன், இங்கேயே உயிரைவிட விரும்புகிறவன். அந்த அளவுக்கு லெம்பா பந்தாயை நேசிக்கிறேன்”.

முடிவை லெம்பா பந்தாயின் நடுத்தர மக்களிடம்- குறிப்பாக பங்சார்வாழ் மக்களிடம்- விட்டுவிடுவதாக அவர் குறிப்பிட்டார். அவர்கள் பிகேஆரின் வலுவான ஆதரவாளர்கள் என்பதை அவர் அறிந்தே வைத்திருக்கிறார்..

“அவர்களே தீர்மானிக்கட்டும். ஆனால், என் முன்னுரிமை எப்போதும் ஏழைகளுக்குத்தான்”, என்றாரவர்.