மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களை வாக்காளர்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்கள் பக்காத்தான் ரக்யாட் உறுப்பினர்களோ, பிஎன் உறுப்பினர்களோ கவலை இல்லை அவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுகொண்ட அவர், 13வது பொதுத் தேர்தல் பக்காத்தானுக்கும் பிஎன்னுக்குமிடையிலான போட்டி இதில் மூன்றாம் வேட்பாளருக்கு இடமில்லை என்றார்.
“அவர்கள் (சுயேச்சை வேட்பாளர்கள்) பக்காத்தான் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, பிஎன் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மூன்றாவது தேர்வுக்கு அங்கே இடமில்லை. அது அரசியல் மாற்றம் ஏற்படுவதையே கெடுத்து விடும்.
“சுயேச்சை வேட்பாளர்கள் மலேசியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை என்பதை வரலாறு காண்பிக்கிறது”. இன்று ஈப்போவில் பாசிர் பிஞ்சியைச் சுற்றி வந்தபோது லிம் செய்தியாளர்களிடம் பேசினார்.