‘ரோஸ்மா மான்சோர்’ பெயரில் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்

AESபாகாங் பெக்கானில் பதிவு பெற்ற வாக்காளரான ரோஸ்மா மான்சோர் என்பவர் சர்ச்சைக்குரிய ஏஇஎஸ்  எனப்படும் தானியங்கி அமலாக்க முறையின் கீழ் அபராதம் செலுத்தப்படாத இரண்டு ஏஇஎஸ் சம்மன்கள்  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவர் XIASEAN360 என்ற எண் தகடைக் கொண்ட வாகனம் ஒன்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரும்
ஆவார்.

MyEG இணையத் தளத்தில் சோதனை செய்த பின்னர் அந்த விவரங்களை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி
இஸ்மாயில் இன்று வெளியிட்டார். அந்த வாகனம் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவிக்குச்
சொந்தமானது என்றும் அவர் நம்புகிறார்.AES1

ராபிஸி கூறிக் கொண்டுள்ளதை மலேசியாகினியும் அந்த இணையத் தளத்தில் சோதனை செய்து உறுதிப்படுத்திக்  கொண்டது.

“இது இரட்டைத் தரத்தைக் காட்டுகின்றது. ஏஇஎஸ் பயனுள்ளது என்பது நஜிப்புக்கு நிச்சயமாகத் தெரிந்தால்  குறைந்த பட்சம் அவருக்கு அணுக்கமாக உள்ளவர்கள்-குறிப்பாக அவரது மனைவி அதனைப் பின்பற்றுவதை  அவர் உறுதி செய்ய வேண்டும்,” என ராபிஸி சொன்னார்.

“முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாடுகளில் (அது மலேசியாவுக்கு அந்நியமானது) அதிகாரத்தில்
உள்ளவர்களுக்கு அணுக்கமாக உள்ளவர்கள் தாங்கள் வலியுறுத்தும் கொள்கைகளை பின்பற்றுகின்றனரா
என்பதைச் சோதனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.”

ஏஇஎஸ் அபராதங்களைச் செலுத்தாதவர்கள் மீது வழக்குத் தொடருவதை சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறுத்தி வைத்தது.

ஏஇஎஸ் சம்பந்தப்பட்ட “சட்டப் பிரச்னைகளும் மற்ற தொழில்நுட்ப விஷயங்களும்’ தீர்க்கப்படும் வரை அது
அமலில் இருக்கும்.