‘லஹாட் டத்து ஊடுருவல் சபா பிஎன் பிரச்சார அம்சம்’

Lahad Datuலஹாட் டத்து ஊடுருவல் சபாவில் வாக்குகளைக் கவருவதற்கு பிஎன் செய்து வரும் பிரச்சாரத்தில் முக்கியக் கருப்பொருளாகத் திகழ்கின்றது. குறிப்பாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அந்த மாநிலத்துக்கு நேற்று  தொடக்கம் மேற்கொள்கின்ற இரண்டு நாள் பயணத்தின் போது அந்த விவகாரம் முக்கியப் பிரச்சார அம்சமாக  திகழ்ந்தது.

நேற்றும் இன்றும் கோலா பென்யூ, பொங்காவான், கோத்தா கினாபாலு, கெனிங்காவ் ஆகியவற்றில் நிகழ்த்திய
எல்லா உரைகளிலும் நஜிப்பும் சபா பிஎன் தலைவர் மூசா அமானும் அந்த ஊடுருவலைச் சமாளிக்க கூட்டரசு  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் சபாவைப் பிஎன் அரசாங்கம் வலுவாக ஆதரிப்பதைக் காட்டுவதாக  வலியுறுத்தியுள்ளனர்.

“உயிர் நீத்த பாதுகாப்புப் படை வீரர்கள் யார் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? பாசிர் மாஸ் (கிளந்தான்),
பெசுட் (திரங்கானு), கிள்ளான் (சிலாங்கூர்) ஆகியவற்றிலிருந்து வந்தவர்கள்.”lahad datu1

“சபா களங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் உச்சவிலை கொடுத்துள்ளனர்… பிஎன் -னுக்கு அளிக்கும்  வாக்கு பாசத்துக்குரிய இந்த மண்ணுடைய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் கொடுக்கும் வாக்கு ஆகும்,”  என நஜிப் கெனிங்காவில் இன்று ஐயாயிரம் பேரிடம் கூறினார்.

பிஎன் அரசாங்கத்தை போல் அல்லாது பக்காத்தான் ராக்யாட் “மலேசியாவில் சபா  தொடர்ந்து இருப்பதை  விரும்பாதவர்களுடன் கூட்டம் நடத்துவதின் மூலம்” மற்ற தரப்புடன் இணங்கிப் போகிறது என்றும் பரமாரிப்பு  அரசாங்கப் பிரதமர் தெரிவித்தார்.