தியான் சுவா : அங்கீகாரம் இல்லாத மாற்றங்களைச் சரி செய்ய வேண்டும்

tianஇசி என்ற தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கடைசி நிமிட மாற்றங்கள் எனக்  கூறப்படும் புகார்களை இசி உடனடியாகக் கவனிக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது.

வாக்காளருக்குத் தெரியாமல் அவருடைய விவரங்கள் மாற்றப்படும் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என  பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஏனெனில் அத்தகைய மாற்றம் சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிப்பதற்கு இடையூறு செய்வதோடு ஜனநாயகத்  தேர்தல் நடைமுறையையும் பாதிக்கும் என அவர் சொன்னார்.

அந்த விவகாரம் மீது வாக்காளர்களிடமிருந்து பல புகார்கள் பிகேஆர்-க்கு கிடைத்துள்ளதாகவும் தியான் சுவா தெரிவித்தார்.

“எடுத்துக் காட்டுக்கு தைவான் கல்வி கற்ற மூன்று வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மலேசியாவுக்குத் திரும்பியுள்ளனர். தங்கள் பெயர் பட்டியலில் நாட்டில் இல்லாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை
அவர்கள் இப்போது கண்டு பிடித்துள்ளனர்.”

“இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்களிக்க தாங்கள் தைவானுக்குத் திரும்ப
வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது,” என்றார் தியான் சுவா.