அரசியல் அல்லது தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கண்டு பிடிக்கப்படும் பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களுக்கு உதவி கிடைக்காது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
“பக்காத்தானைச் சேர்ந்தவர்கள் யாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் நாங்கள் அவர்களைப்
பாதுகாக்கப் போவதில்லை,” என அவர் சொன்னார்.
பிஎன் கூட்டணியின் தேர்தல் கட்டமைப்பு மீது நடத்தப்பட்டுள்ள அண்மைய தாக்குதலுக்குப் பின்னணியில் பக்காத்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎன் குற்றம் சாட்டியுள்ளது தொடர்பில் அன்வார் கருத்துரைத்தார்.
பக்காத்தான் மீது பழி போடப்பட்டதில் வியப்பு ஏதுமில்லை என்றாலும் அமைதியாக சிந்திப்பது அவசியம் என்றார் அவர்.
“பழி போடுவதற்கு இது தருணமல்ல. போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா தரப்புக்களும் போலீசாரை ஆதரிக்க வேண்டும்.”

























