சுயேச்சையாக போட்டியிடுவதற்காக கமிலியா மன்னிப்புக் கேட்கிறார்

கமிலியாகோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக முன்னாள் அம்னோ மகளிர்  துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் தமது முகநூல் பதிவில் அவ்வாறு மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் நாடாளுமன்றத்தில் மகளி
பங்கேற்பை அதிகரிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

“என்னுடைய நடவடிக்கையால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். என்னைக் காயப்படுத்தியவர்களையும் நான் மன்னிக்கிறேன். நமது முயற்சிகளுக்கு அல்லாஹ் எப்போதும் துணை நிற்பார்  என நாம் தொழுவோம்,” என அவர் நேற்றிரவு முகநூலில் சேர்த்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

“அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்ல நாம் பாடுபட வேண்டும். அதற்கு உங்களுடைய யோசனைகள், மனித ஆற்றல், பிரச்சாரத்துக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது.’

இன்று காலை முகநூலில் சேர்த்த காணொளியில் தமது நடவடிக்கைக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு கட்சியிடமிருந்து தமக்கு எந்த அங்கீகாரக் கடிதமும் கிடைக்கவில்லை என அவர் கமிலியா அதில் தெரிவித்துள்ளார்.

“கட்சியிடமிருந்து அது போன்ற கடிதம் நமக்குக் கிடைக்காத போது நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முடியும்,” என அவர் சொன்னார்.கமிலியா2

கமிலியா எடுத்த நடவடிக்கை அளித்த அதிர்ச்சியால் அம்னோ மகளிர் பிரிவு தேர்தல் எந்திரம் மூன்று  நாட்களுக்கு பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் உறுப்பினர்களை அதன் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் சாந்தப்படுத்தியதாக  கூறப்பட்டது. ஷாரிஸாட் தேர்தலில் போட்டியிடவில்லை.

இன்று காலை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கோலா கங்சாருக்கு வருகை அளித்தார்.

அம்னோவை விட்டு விலகியவர்களை மக்கள் கை விடுவர் என அவர் சொன்னார்.

நஜிப் கமிலியாவைப் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும் கமிலியாவைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது திண்ணம்.

“ஏன் ? தனிநபர்கள் போனாலும் கட்சி தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் போராட்டம் தொடரும் என்பது மக்களுக்குத் தெரியும்,” என்றார் அவர்.

“அதனை வரலாறும் மெய்பித்துள்ளது,” என்றார் அவர்.

கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் கமிலியாவுடன் பிஎன் வேட்பாளராக வான் முகமட் கரில் வான் அகமட்டும் பாஸ் சார்பில் கலீல் இட்ஹாம் லிம் அப்துல்லாவும் போட்டியிடுகின்றனர்.

சுயேச்சையாகப் போட்டியிடுவததற்காக கமிலியாவை கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியிலிருந்து நீக்கியது.