ஆளும் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறைகள் தாக்கப்பட்டதற்கு பக்காத்தான் ரக்யாட்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் மசீச தலைவர் சுவா சொய் லெக். அது பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டி வருவதாக அவர் கூறினார்.
“மாற்றரசுக் கட்சி பிஎன்னுக்கு எதிராக வெறுப்பூட்டும் அரசியலை ஊக்குவித்து வருகிறது”, என இன்று பிற்பகல் செகாமாட்டில் ஜெமந்தாவைச் சுற்றிவந்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சுவா (நீலநிறச் சட்டையில்), நிபோங் தெபாலில் நிகழ்ந்த குண்டு வீச்சு சம்பவம் பற்றியும் செகிஞ்சான், புந்தோங் ஆகியவற்றில் எரியூட்டும் முயற்சிகள் நடந்தது பற்றியும் கருத்துரைத்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்தரப்பினர் சினமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் அது எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும் என்றவர் எச்சரித்தார்.
“அவர்கள் தொடர்ந்து சினமூட்டி வந்தால், எங்கள் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க இயலாது. அவர்கள் எதிர்நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும். அதன் விளைவாக நாட்டில் குழப்பம் சூழும்”.
என்றாலும், மசீச அதன் நடவடிக்கை அறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கவில்லை என்று கூறிய அவர், “மாற்றரசுக் கட்சியினர் விவேகத்துடன் நடந்துகொள்வார்கள் என நம்புகிறோம்” என்றார்.
இன்று காலை ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமாரின் மகளுக்குச் சொந்தமான இரண்டு கார்களுக்கு எரியூட்டப்பட்டது.
‘20,000பேரா, இருக்க முடியாது’
புதன்கிழமை செகாமாட்டில் பக்காத்தான் செராமாவுக்கு 20,000 பேர் திரண்டு வந்ததாகக் கூறப்படுவதை அபத்தம் என்று சுவா குறிப்பிட்டார்.
“அந்தத் திடலில் 20,000 பேர் கூடுவதற்கு வழியில்லை. இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு விருந்து நடத்தினோம். அதில் கூடினபட்சம் 4,000 பேர் அமரலாம், 6,000-இலிருந்து 8,000 பேர்வரை நிற்கலாம். 20,000 பேர் எல்லாம் முடியாது”, என்றாரவர்.
மசீசவுக்கு சீனர்களின் ஆதரவு பற்றிக் கருத்துரைத்த சுவா, அவர்கள் கடைசி நேரத்தில்தான் எதையும் தீர்மானிப்பார்கள் என்றார். ஆனால், மலாய்க்காரர், இந்தியர் ஆதரவு தங்களுக்குத்தான் என்று மிகுதியும் நம்புகிறார்.
பொதுத் தேர்தலில் எத்தனை நாடாளுமன்ற இடங்களை மசீச வெல்லும் என்று வினவியதற்கு, எதிர்தரப்பினர்போல் மசீச வீணே பீற்றிக்கொள்ளாது என்றார்.
நமது பிரதமர் இன்று வரை பல அரசியல் வன்முறை பற்றி வாய் திறந்து கண்டித்ததே இல்லை. ‘தண்ட புத்ரா’ என்ற இனவாத படத்தை கல்லூரிகளில் கள்ள தனமாக திரையிட்டு இளம் மாணவ சமூகட்டினரிடையே ‘இன வெறுப்பு’ என்ற நஞ்சை விதைப்பதில் காட்டும் உண்மையான அக்கறையை, இன வெறியன் பெரகாச ஜுல்கிப்லி, இப்ராகிம் அலி போன்ற வெறியர்களை விடாப்புடியாக வேட்பாளர்களாக அறிவிப்பதில் காட்டும் அக்கறையை, வன்முறைகளை கண்டிப்பதில் காட்டவில்லை. நல்ல ‘சத்து மலேசியா’ பிரதமர்!! அனைத்து இந்தியர்களும் அந்த மக்கள்சக்தி கோடிஸ்வர தனேந்திரன், கூறிய ‘ஆண்டவன் தந்த வரப்பிரசாதம்’ நஜிப்கு (அல்டுனியா கொலைவழக்கு குற்றசாட்டு, ச்கோர்பேனே நீர்மூழ்கி ஊழல் புகழ்) ஒட்டுக்களை அள்ளி குவித்து பெருமை கொள்வோம்!!
சீனர்களிலேயே ஒரு கேவலமான் சீனன் என்றால் இந்த சிக்ஸ் லேக் கதான் இருப்பான் போலும் துப்பு கெட்ட ஜென்மம் காமம் கண்ணை மறைகுட்டடா அடேய் 20000 பேர்தான் கலந்துகொண்டார்கள் கபோதி .