தென் பிலிப்பீன்சிலிருந்து போராளிக் கும்பலொன்று லஹாட் டத்துவுக்குள் ஊடுருவல் செய்ய சதித்திட்டம் போட்டவர்கள் மூன்று பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் என்பதைத் தற்காப்பு அமைச்சு கண்டுபிடித்துள்ளது.
இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இது தொடர்பான எல்லாத் தகவல்களும் விவரங்களும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
“அவர்களில் இருவர் தீவகற்பத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொருத்தர் சாபாவைச் சேர்ந்தவர்”, என்று அஹ்மட் ஜாஹிட் கூறினார். அவர், இன்று அலோர் ஸ்டாரில் உள்ள அரச மலேசிய ஆகாயப்படை கல்லூரிக்கு வருகை புரிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.
ஆனால், சம்பந்தப்பட்ட மாற்றரசுக் கட்சித் தலைவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
சில தரப்பினர் இதை பிஎன்னின் அரசியல் திட்டம் என்றும் அம்னோவின் அரசியல் நாடகம் என்றும் கூறக்கூடும் என்பதால் அதைத் தவிர்ப்பதற்கு ஊடுருவல் தொடர்பான நடவடிக்கைகள் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரே மேற்கொள்ளப்படும் என்றாரவர்.
“ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இப்போது ஆதாரங்கள் கைவசம் உள்ளன”, என்றவர் சொன்னார்.
-பெர்னாமா
நல்ல கண்டு பிடிப்பு …. வாழ்த்துக்கள்… இப்படியே எதாவது சொல்லிக்கொண்டே இருங்கள்…. தேர்தலுக்கு பிறகு நீங்கள் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.
ஆரம்பிச்சுடாங்கையா!
உண்மை இருப்பின் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. இது ஒரு நாட்டின் கடுமையான பாதுகாப்பு விவகாரம். ஏன் பிறகு/பொறுமை? என்னய்யா கட்ட கதையிது?
நீ தானே தற்காப்பு அமைச்சர், அந்நியர்கள் உள்ளே வரும்வரை நீ என்ன செய்து கொண்டிருந்தாய் ,இப்போ பாகாதான் மேல் பழி போட்டு ஜெயிக்க நினைப்பது அறிவீனம். இன்னும் 9 நாட்கள் உள்ளன ,அதற்குள் யார் அந்த 3 பேர் என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.
எல்லா
வற்றிக்கும் காராணம் அன் …வர் தான்.இந்தா கதைதானே சொல்லவாரீர்கள். போதுமடா நீங்களும் உங்கள் அறிவுத்திறனும், வேறு கதையை சொல்ல தெரியாதா?உண்மையில் எதிர் கட்சியை சேர்ந்தா யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் இந்நேரம் நீங்கள் எல்லோரும் சும்மா இருந்துயிருப்பீர்களா?தக்க ….தையா……என்று மலேசியாவே அதிரும்படியல்லவா ஆடியிருப்பீர்கள்.இன்னுமாடா மக்களை முட்டாள்கள் என்று நீனைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் மடையர்களா………மடையர்களா.