பொருளாதார அரிச்சுவடி: பிரிமைவிட எரிபொருள் விலைக்குறைப்பு மேலானது

ysayஉங்கள் கருத்து ‘விரைவில் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவுள்ள ஒரு நாட்டில் எப்படிப்பட்ட கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறார்? இதுதான் நஜிப்பின் பொருளாதாரமா?’

நஜிப்: பிரிம் மேலானது என்கிறபோது பெட்ரோல் விலையைக் குறைப்பானேன்?

பெர்ன்ஸ்: ரொக்க அன்பளிப்பு என்பது மக்களிடம் மற்றவரை நம்பியிருக்கும் மனநிலையை உருவாக்கி அவர்களை நிரந்தர பிச்சைக்காரர்களாக்கி விடும்.

ரொக்க அன்பளிப்பை வழங்குவதன் மூலமாக மக்களின் பணத்தைக் கொண்டு மக்களுக்கே கையூட்டு கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வரப் பார்க்கிறது பிஎன். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தேசிய கருவூலத்தைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவார்கள்  தேசிய கடன் மேலும் பெருகும்.

அஜிப்: பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரும் நிதி அமைச்சரும், மகளிர் மேம்மாட்டு அமைச்சருமான நஜிப்பிடமிருந்து இப்படி ஒரு மட்டமான கருத்தா? பெட்ரோல்தான் பணவீக்கத்துக்கு முக்கிய காரணி என்பதை அவர் அறியமாட்டாரா?

ஏழை மக்கள் பிரிமுக்காக (1மலேசியா உதவித் திட்டம்) தொடர்ந்து கையேந்தி நிற்க வேண்டும் என விரும்புகிறார். விரைவில் வளர்ச்சியடைந்த நிலையை எட்டவுள்ள ஒரு நாட்டில் எப்படிப்பட்ட கலாச்சாரத்தை உருவாக நினைக்கிறார்? இதுதான் நஜிப்பின் பொருளாதாரமா?

சிரப்: நஜிப்புக்கு பொருளாதாரம் புரியவில்லை. நிறைய  பொருள்கள் விலை உயர்வதற்கும் சேவைகளின் கட்டணம் உயர்வதற்கும் காரணமாக இருப்பது பெட்ரோல்தான். கடந்த முறை எரிபொருள் விலை உயர்ந்தபோது பொருள்களின் விலைகளும் உயர்ந்தன.

பிரிம் நல்லதுதான். ஆனால், ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் அவனின் ஒருநாள் பசியைத்தான் தீர்க்க முடியும்.

பக்காத்தான் ரக்யாட், பல்வேறு கொள்கைகளை அமல்படுத்தி அதன்வழி  வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உற்பத்தியையும் குடும்ப வருமானத்தைப் பெருக்கவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இப்படிப்பட்ட அரசாங்கத்தைத்தான் நான் விரும்புவேன்.

உண்மை:  எங்களுக்குக் கையூட்டு வேண்டாம். எல்லா மலேசியர்களுக்கும் வளத்தைச் சரிசமமாக பகிர்ந்தளிக்கும் ஒரு செயல்முறைதான் வேண்டும்.

மலேசியர்களுக்குக் கையூட்டு தேவையில்லை. ஊழல் இல்லாமலும் வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கு இல்லாமலும் நாடு வளர்ச்சி காண வேண்டும். அதுதான் தேவை.   ஜேம்ஸ் போண்ட்007: பணக்காரர்கள் நிறைய வருமான வரி செலுத்துகிறார்கள். பெட்ரோல் விலையைக் குறைத்தால் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் விலையும் குறையும். அல்லது மேலும் உயராது. இதனால் மக்கள் அனைவருமே நன்மை அடைவர்.

பிரிம் ஒன்றும் ஆண்டுக்கு ஆண்டு தானாகவே கொடுக்கப்படுவது அல்லவே. அடுத்த நான்காண்டுகளுக்கு பிரிம் இல்லாமல் போகலாம். ஆனால், பெட்ரோல் விலை உயரும், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வந்துவிடும், சாலைக்கட்டணம் கூடும்.

வேண்டாம் வேண்டாம்:  எத்தனை பேருக்கு பிரிம் கிடைத்தது? பெட்ரோலை எல்லாவகை ஊர்திகளும்(கார், லாரி, மோட்டார்-சைக்கிள்) பயன்படுத்துகின்றன. எத்தனை பேர் ஊர்தி வைத்திருக்கிறார்கள்? பிரிம் கிடைக்கப்பெற்றவர்களை இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பணக்காரர்களைப் பற்றிப் பேசும்போது பிஎன் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு (ஐபிபி) எரிபொருள் வாங்க நிதியுதவி செய்கிறதே, இங்கு நன்மை அடைவது  யார்? பணக்காரர்கள்தானே. சொல்லக்கூடாததைச் சொல்லிப் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மேலானது:  ரொக்க அன்பளிப்பைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதாகக் குற்றம்சாட்டைத் தவிர்க்க வேண்டுமானால் பொதுத் தேர்தல் நடக்காத காலத்தில் அதைக் கொடுக்க வேண்டும்- பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் செய்ததைப் போல். அதுவும் அரசுக்குக் கட்டுப்படி ஆனால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

ஆனால், நஜிப் அதைக் கொடுக்கும் நிலையில் இல்லை. தேசிய கடன்கள் பெருகிக் கிடக்கின்றன.  கருவூலத்தை நல்லாத்தான் நிர்வகித்து வந்திருக்கிறார்கள்.

தட்டுத்தட்டு:  50 ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் பிச்சைக்காக கையேந்தி நிற்க வேண்டும். அதுதான் பெருமை என்று நினைக்கிறாரா பிரதமர்?

வாங்மலேசியா: பெட்ரோல் விலை குறைந்தால் பொருள்களின் விலையும் மளமளவெனக் குறையும். ஆண்டுக்கு ரிம500-க்கு மேலேயே மிச்சம் பண்ணலாம்.

அதற்கும் மேல், மின்சாரக் கட்டணத்தை, தண்ணீர் கட்டணத்தைக் குறைக்கலாம். அது மக்களுக்கு மேலும் நன்மையாக இருக்கும்.

பெயரிலி 1000: பரிதவிக்கும் நிலையில் உள்ளார் பிரதமர். அதனால் என்ன பேசுகிறோம் என்பது அவருக்குத் தெரியவில்லை.