இசி: அழியா மையின் நிறம் மூவருக்கு மட்டுமே தெரியும்

inkஅடுத்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையின் நிறம் இன்னும் பரம  ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அது போலியாக தயாரிக்கப்படுவதை தடுப்பதே அதன் நோக்கமாகும்.

மையின் நிறம் பற்றி மூவருக்கு மட்டுமே தெரியும் என்றும் இசி என்ற தேர்தல் ஆணையச் செயலாளர்  கமாருதின் முகமட் பாரியா சொன்னார்.

ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் தாமும் அவர்களில் இருவர் என அவர் தெரிவித்தார்.

ஆனால் கமாருதின் மூன்றாவது நபருடைய அடையாளத்தைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

“அடுத்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் நாள் வரை அழியா மையின் நிறம் பரமரகசியமாக வைத்திருக்கப்படும் என நான் நம்புகிறேன்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

சந்தையில் கிடைக்கக் கூடிய அழியா மைகளிலிருந்து அந்த மையின் நிறம் மாறுபட்டது, புதுமையானது என கமாருதின் மேலும் சொன்னார்.

அதனால் மற்ற மைகளைக் கொண்டு வாக்காளர்களுக்கு குறியிடப்பட்டால் அதனை இசி அதிகாரிகள் எளிதாக அடையாளம் கண்டு விட முடியும் என்றார் அவர்.ink1

“அத்துடன் அந்த மையைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கலவைப் பொருட்கள் சாதாரண  மைகளிலிருந்து வேறுபட்டவை. அதனை யாரும் போலியாக தயாரிக்க முடியாது,” என்றார் அவர்.

அந்த மை வாக்குச்சீட்டுக்களை அழுக்காக்கி விடும் என்றும் அதனால் அந்த வாக்குச் சீட்டுக்கள் செல்லாததாகி  விடும் என்றும் மக்கள் கொண்டுள்ள கவலை பற்றிக் குறிப்பிட்ட கமாருதின் வாக்குச் சீட்டுக்களில் குறியிடுவதற்கு முன்னர் அது நிகழ்ந்தால் அவர் புதிய வாக்குச் சீட்டைக் கேட்கலாம் என்றார்.

என்றாலும் வாக்காளர் முதலில் ஒரு பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.

“பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மை விரைவாக உலரக் கூடியது. உண்மையில் இசி காயாத மைத் துளிகளைத் துடைத்துக் கொள்வதற்கு இசி tissue paper-ரை வழங்கும்.”

“வாக்களிப்பதற்கு முன்னர் தங்கள் ஆள்காட்டி விரலில் எந்த மையைக் கொண்டும் குறியிடுவதற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என நான் வாக்காளர்களுக்கு அறிவுரை கூறுகிறேன். அதனைச் செய்வதற்கு இசி அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,” என்றும் கமாருதின் மேலும் சொன்னார்.