பொதுத் தேர்தல் கண்ணோட்டம்: 2010-இல் மாற்றரசுக்கட்சியிலிருந்து விலகிய சுல்கிப்ளி நூர்டின், பிஎன் தம்மை ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக்கியதை நினைக்கும்போது மீண்டும் பிறப்பெடுத்ததைப்போல் இருக்கிறது என்றார்.
“இது எனக்கு ஒரு மறுபிறவி”, என நேற்று மஇகா உறுப்பினர்களடங்கிய ஒரு சிறு கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார். மறுபிறவி என்பதைத் தமிழிலேயே குறிப்பிட்டார்.
இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசுவதைக் காண்பிக்கும் வீடியோ படங்களினால் பெயர்நாறிப் போய்க்கிடக்கும் சுல்கிப்ளி (அவை 10 ஆண்டுகள் முந்தி பேசியவை என்கிறார்) இப்போது தமிழில் சில சொல்களைக் கற்று வைத்துக்கொண்டு ஷா ஆலமின் 100,076 வாக்காளர்களில் 14 விழுக்காடாகவுள்ள இந்தியர்களின் வாக்குகளைக் கவர முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய அந்தக் காணொளிகள் பற்றி விவாதிக்க அவர் வெட்கப்படுவதில்லை. பாஸ் கட்சியில் இருந்தபோது அப்படிப் பேசியதாகக் கூறும் அவர், அது பாஸ் மற்றும் பக்காத்தானின் “வெறுப்பூட்டும் சித்தாந்தத்தை”க் காண்பிக்கிறது எனவும் அதன் இனப் பாகுபாட்டுக்கு அது ஒரு “சான்று” எனவும் பழிபோடுகிறார்.
“மலாய்க்காரர்கள் சீனர்களையும் இந்தியர்களையும் வெறுக்கவும் பதிலுக்கு இவர்கள் அவர்களை வெறுக்கவும்தான் கற்றுத் தருகிறார்கள்.
“மலாய்க்காரர்களையும்கூட ஒருவரை மற்றவருடன் மோத விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தங்களுடன் இல்லாத எல்லோருமே எதிரிகள்தான்”, என ஷா ஆலமில் 300 மஇகா உறுப்பினர்களிடம் பேசியபோது சுல்கிப்ளி நூர்டின் கூறினார்.
தம் பேச்சில்‘அப்பா’ ‘அம்மா’ என்னும் சொல்களைச் சர்வசாதாரணமாக புழங்க விட்டார். மலேசியாவின் தேசிய உருவாக்கத்துக்கு இந்தியர் ஆற்றியுள்ள பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்டு அதற்கு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு உவமையையும் எடுத்துக் கூறினார்.
“மலேசியாவில் மலாய்க்காரர்கள் வெற்றிலை, சீனர்கள் பாக்கு, இந்தியர்கள் சுண்ணாம்பு.
“சுண்னாம்பு (தமிழிலேயே சொன்னார்) கொஞ்சம்தான் தடவுவோம். ஆனாலும் வெற்றிலை போடுவதற்கு அது மிக முக்கியம்”, என்றார்.
ஷா ஆலத்தில் ஒழுங்கீனத்துக்கு முடிவுகட்டுவார்
காணொளியில் சுல்கிப்ளி இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசியதால் எழுந்த சலசலப்பு அடங்கக்கூட இல்லை என்ற நிலையில், பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அவரை சிலாங்கூர் தலைநகரின் வேட்பாளராக அறிவித்தது பெரும் வியப்பை அளித்தது.
அவர், தீவிரவாதி, மலாய் மேலாதிக்கத்துக்கு போராடும் பெர்காசாவில் அனல் கக்கும் பேச்சாளர் என்றெல்லாம் பேர் பெற்றிருந்த போதிலும் அவரது தேர்தல் பரப்புரைகளில் தீவிரவாதத்தைக் காண முடியவில்லை, இதமாகவும் பதமாகவும்தான் பேசினார்.
பரப்புரைகளுக்குத் தனியாகச் செல்வதில்லை. ஷா ஆலம் தொகுதிக்குள் அடங்கிய கோட்டா அங்கெரிக் பத்து தீகா ஆகியவற்றுக்கான சட்டமன்ற வேட்பாளர்களான முகம்மட் யூசுப் டின், அஹ்மட் நவாவி ஸின் ஆகியோருடன் சேர்ந்தே செல்கிறார்.
மலாய்க்கார்கள், சீனர்கள், இந்தியர்கள் அடங்கிய சிறுசிறு கூட்டத்தைச் சந்தித்துப் பேசுவதே அவர்கள் வகுத்துக்கொண்டுள்ள வியூகம்.
நடப்பு எம்பியான பாஸ் கட்சியைச் சேர்ந்த காலிட் சமட்டைத் தோற்கடிக்க முடியுமா என்று வினவியதற்கு முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
“செராமாக்களின்போது மக்களுக்கு என்மீது அதிருப்தி என்றால் நேருக்கு நேராக சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிறகு அவர்களுக்கு விளக்கமளிப்போம்.
“இங்குள்ள மக்கள் விசயம் அறிந்தவர்கள். அறிவாளிகள். அவர்களின் அறிவாற்றலை நாம் குறைத்து மதிப்பிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். யார் சொல்வது பொய் என்பதை அவர்கள் அறிவார்கள்”.
வெற்றி பெற்றால் என்ன செய்வார் என்று வினவியதற்கு, அந்நகரின் “ஒழுக்கப் பண்புகளை” திரும்பக் கொண்டுவரப் போவதாகக் கூறினார்.
“ஷா ஆலம் ஒழுக்கம்கெட்ட செயல்கள் அற்ற ஓர் இடமாகத்தான் இருந்தது. எதிர்தரப்பு ஆட்சிக்கு வந்ததும் எல்லா வகை நடவடிக்கைகளும் பெருகி விட்டன.
“அந்த ஒழுக்கப் பண்புகளை மீட்டெடுப்பேன்”, என்றார். அங்குள்ள வாக்காளர்கள் பெரும்பாலும் நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் என்பதால் பெரிய விவகாரங்கள் எதுவும் இல்லை என்றார்.
மஇகாவில் சலசலப்பு
யார் என்ன சொன்னாலும் சுல்கிப்ளி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டது ஷா ஆலம் மஇகாவில் ஒரு சலசலப்பை உண்டுபண்ணியுள்ளதை மறுக்கவியலாது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷா ஆலம் மஇகா உதவித் தலைவர் சி.சுப்பையாவும் 104 உறுப்பினர்களும் கடந்த வாரம் கட்சியிலிருந்து விலகினர். மாற்றரசுக் கட்சியை ஆதரிக்குமாறு தம் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொள்ளப்போவதாக சுப்பையா தெரிவித்தார்.
“ஷா ஆலமைப் பொறுத்தவரை, சுல்கிப்ளிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றுதான் எல்லோரையும் கேட்டுக்கொள்ளப் போகிறேன்”, என்று நேற்று மலேசியாகினி தொடர்புகொண்டபோது அவர் கூறினார்.
சுல்கிப்ளி மீதான எதிர்ப்புணர்வை இந்தியர்கள் வெளிப்படையாகக் காண்பிக்கவில்லை என்றாலும் அது அவர்களிடம் ஆழமாக பதிந்துள்ளது என்றாரவர்.
ஷா ஆலமில் பெர்காசா உதவித் தலைவர் மீதான இந்த எதிர்ப்பும் வெறுப்பும் பக்கத்தில் மஇகாவின் எஸ். முருகேசன் போட்டியிடும் கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதிக்கும் பரவுமானால் அது பிஎன்னுக்கு ஆபத்தாக முடியும். ஏனென்றால் அங்குள்ள வாக்காளர்களில் 29 விழுக்காட்டினர் இந்தியர்கள்.
கோட்டா ராஜா மஇகா தேர்தல் பணியாளர்கள், சுல்கிப்ளியின் நியமனம்தான் தங்களுக்கு பெரும் தலையிடியாக உள்ளது என்கிறார்கள். அவர் மஇகா நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறார்கள். கலந்துகொண்டால் அது மேலும் சிக்கலை உண்டுபண்ணும்.
ஆனால், ஷா ஆலம் மஇகா தலைவர் கே.எஸ். சுப்பையா வேறு மாதிரியாக நினைக்கிறார். சுல்கிப்ளி நஜிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய சமூகத்தை அவர் வேண்டிக்கொண்டார்.
“நாம்(இந்தியர்கள்) விரும்புவதையெல்லாம் கொடுக்கும் பிரதமர் இதற்குமுன் இருந்ததில்லை.
“அன்றுகூட அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆலயத்துக்கு நிதி வேண்டும், பள்ளிக்கூடத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று நான் கேட்டதை 20 நிமிடங்களில் அங்கீகரித்தார்”, என்று நேற்று அதே செராமாவில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
“இப்படிப்பட்டவர் இந்து சமயத்தை இழிவுபடுத்துவாரா? அத்துடன், மன்னிப்பது மனிதப் பண்பு. மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்கூட ஆலயங்களை இழுத்து மூடுவேன் என்று ஒருகாலத்தில் மிரட்டி இருக்கிறாரே.
“அவரை மன்னித்தோம். அதேபோல் சுல்கிப்ளியையும் மன்னிப்போம்”, என்றவர் வெறுப்புணர்வுடன் வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என்று தம் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
சுல்கிப்ளியும் மீண்டும் கூட்டத்தினர் முன்வந்து “மன்னிப்போம், மறப்போம்” எனத் தமிழில் தம் கைவரிசையைக் காண்பித்து கூட்டத்தைக் கவரப் பார்த்தார்.
உனக்கு காரியம் ஆகனும்ன எங்க காதுல பூ சுத்துவ . மத வெறி பிடிச்ச நாயே நாங்க கெலிங் ந பங்களா காரனுக்கும் பாகிஸ்தான் காரனுக்கும் யாரு டா , ic தந்தியே அவனுங்கள விட வா நாங்க கேவலமா ஆயிட்டோம் .சுதந்திரம் வாங்கி பின் பிறந்த பிள்ளைக்கு பிறந்த சுறா தர வலிக்குது நேத்து வந்த பங்களா வுக்கு 24 மணி நேரத்திலே ic தர ,அதிலே மட்டும் அவ்ளோ சுறுசுறுப்பு காட்றியே ஏன் எங்க மேலயும் கொஞ்சம் கருணா காட்டலாமே . நீ என்ன தான் வேஷம் போட்டாலும் உம்னோ புத்தி உன்ன விட்டு போகாது .
படிக்காத காட்டன் சொன்னால் மன்னிக்கலாம்….
படித்த நாட்டான் சொல்லிருக்கான் எப்படி மன்னிப்பது?
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்
தப்பு செய்தவன் தண்டனை ஏட்கனும்
k
முடியாது!!!!!!!!!!!!!!!!!!ம.இ.கா சரவணன் மட்டுமே எங்கள் தேரவு. மற்றவருக்கு ஆப்பு. 6 நாள் உண்டு. அதற்குள் குரல் கொடுத்து தொகுதியைக் காப்பாற்றி கொள்ளுங்கள்.
இப்படி இருப்பதால் தான் எல்லோரும் நம் தலையில் மாவரைக்கிரார்கள்.சுப்பையா மாதிரி ம.இ.கா.காரன்கள் இருக்கும் வரையில் நம் நிலை அதோகதிதான்.
மறு பிறவி என்பது ஜுல்கிப்லி மதத்தில் கிடையாதே!!!! அவர் இப்பொழுது இந்துவாக மாறிவிட்டாரா??? அரசியலும் ஒருவனை எப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்கிறது…அதையும் ஜால்ரா செய்து நம் மக்கள் அவர் பின் செல்வது, நம் தாயை மிதிப்பது போல் அல்லவா???
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
இவனை நம்பினால் நிற்கப் போவதோ நாடு ரோட்டிலே.
வணக்கம். ஜுல்கிப்லி பி ன் வேட்பாளர் என்பதை விட இன்னமும் அவர் பெர்காச உறுப்பினர் என்பதை மறக்க கூடாது . இந்த ஆண்டு கூட அவர் நமது சமயத்தை அவமதித்திருக்கிறார். உண்மையில் அவர் திருந்தி இருந்தால் முதலில் பெர்காசாவில் இருந்து ராஜினாமா செய்யட்டும் பிறகு பார்க்கலாம் . அதுவும் நாம் மன்னித்தால் ???
நம் மதத்தை இழிவு சய்வபவன் ஒரு காலம் மன்னிப்பு கிடையாது .அதே போல் நாம் செய்திருந்தால் என்ன ஆயிருக்கும். இந்தியர்களே சற்று யோசித்து வாக்கு அளியுங்கள்.உங்கள் வருங்கால தலைமுறை யை நினைத்து பாருங்கள்.
அரிசிக்கும் ,பருப்புக்கும் கையேதியே பழக்க பட்டவனிடம் தன்மானத்தை எதிர் பார்க்க முடியாது. -கேட்டதை எல்லாம் 20 நிமிடங்களில் அங்கீகரித்தராம் அப்படி என்றால் இந்த 4 வருடத்திலே இன்னும் அதிகமா கேட்டுருக்கலமே…..? Hulu selangor இடை தேர்தலில் தொகுதி அம்னோ பழனிவேலுவை ஏற்க்க மறுத்ததால் வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் (இப்பொழுதும் கூட,அம்னோ ஏற்காதவர்களை மாற்றப்பட்டு இருக்கிறார்கள்) ஆனால் அம்னோ யாரை நிறுத்தினாலும் கூட்டனி கட்சி ஏற்று கொள்ள வேன்டும்-இதுதான் அம்னோ கொள்கை. தன்மானம் உள்ள இந்தியர்கள் சுல்கிப்ளி மட்டும்மல்ல,- எந்த கட்சி யார் வேப்பாளர் என்று பார்க்காமல் BN என்றால் இப்ராஹிம் அலி ,சுல்கிப்ளி என்று நினைத்து மக்கள் கூட்டனிக்கு வாக்களிக்க வேண்டும். இதுதான் நாம் அம்னோவுக்கு புகட்ட போகும் சரியான பாடம்…….
நல்ல பாடம் புகட்டுவோம் ,,,,,ஒருவனுக்கு அடையாளமே மொழியும் மதமும்தானே ,,,, அதையே கேவலபடுடியவன் …..அந்த நாய்க்கு பொய் ஒட்டு போட்ட ,,,,நம்மை நாமே அசிங்க படுட்டிகொள்ளவேண்டியதுடான் ,,,,,மானமுள்ள தமிழன் இதை செய்யமாட்டன் ,,,,,யோசித்து செயல்படுங்கள்,,,,நன்றி,,,
நம்மை தூற்றுவொரை ஒரு புறம் ஒதுக்குவோம், நமக்கும் நம் நாட்டு மக்களுக்காகவும் இரவும் பகலும், நீதிக்கும் தர்மத்திற்கும் போராடும் ஒரு பெண் சிங்கத்தின் குரலுக்கு அங்கிகாரம் நாம் தான் முதலில் கொடுக்க வேண்டும். அம்பிகாவை உலகமே பாராட்டி விட்டது, நம் மலேசியர்களும் மெய்சிளிர்கின்றனர்
….ஆனால் நம் இந்தியர்கள் சுயநலம் பாராமல் அவருடைய போராட்டத்திற்கு கை கொடுத்து நம் நாடு, நம் சமுதாயம், நம் சுதந்திரம், நம் எதிர்காலம், நம் தன்மானம் என்று புதிய வரலாற்றை படைப்போம். தட்டி எழுப்பிய நம் மக்களுக்கு அம்பிகா மலேசியாவின் , பாரதியின் புதுமை பெண்.
நான் மட்டும் அங்கிருந்தால்,அவனுக்கு கண்டிப்பாக செருப்பு மாலைதான்,அதோடு அவனுக்கு முத்தம் கொடுத்த அந்த பன்டிக்கும் விளக்குமாறு மாலைதான்….ம இ கா மாதிரியும் அங்கிருக்கும் ஒரு சிலர்ப்போல் துப்புக்கட்டவன் இல்லை நான்….
நம்மை சுண்ணாம்புக்கு ஒப்பிட்டு பேசுறன் ஒரு மாங்கா
மடையன். ஏமாந்தது போதும். சுப்பையா போன்றவர்கள் நேரத்துக்கு ஒரு பேச்சு. கை நெறைய வாங்கி விட்டாயா சுப்பையா சொல் மானம் கெட்டவனே. தன்மானம் இல்லாதவன் எல்லாம் எதுக்குடாஹ் கட்சி தலைவனா இறுக்க அருகதை இல்லாதவன். நெஞ்சில் உரமும் இன்றி , நேர்மை திறனும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, கிளியே , வாய் சொல்லில் வீரனடி. கவி பாரதி உன் பெயரை கொண்டவர். மக்கலெஹ் அந்த ஜூல்கிப்லி நாய் என்ன உருண்டு புரண்டு தமிழ் பேசினால் கூட எதிர் கட்சிக்கு தைரியமஹா ஒட்டு போடுங்கள்.
சுல்கிப்ளி நூர்டின், நீ பாஸ் கட்சியில் இருந்தபோது நீ பேசிய பேச்சுக்கு நீயே பொறுப்பு. உன்னைப் போன்றவர்கள் கட்சியில் இருந்தபோது பாஸ் நாறிக் கிடந்தது உண்மைதான். ஆனால் உன்னைப் போன்றவர்கள் வெளியேறியபின்னர் பாஸ் தூய்மை அடைந்துவிட்டது.
கே.எஸ். சுப்பையா, ஷா ஆலம் வட்டாரத்தில் ஏற்கனவே நாறிக் கிடந்த உனது பெயர் இப்போது மேலும் நாற்றம் எடுத்து விட்டது. என்னது, ஆலயத்துக்கு நிதி வேண்டும், பள்ளிக்கூடத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று நீ கேட்டதை 20 நிமிடங்களில் அங்கீகரித்தாரா? என்னவோ 20 நிமிடங்களில் பள்ளிக்கூடம் தரமுயர்ந்த மாதிரியும் 20 நிமிடங்களில் ஆலயத்துக்கு நிதி கிடைத்த மாதிரியும் அல்லவா பேசுகிறாய்! சரி அதை அங்கீகரித்தது யார்? பிரதமர் அங்கீகரித்த பலப்பல இன்னும் மூலை முடுக்கெல்லாம் குப்பைகளாகி மக்கிப்போய் கிடப்பது தெரியுமோ?
சா ஆலாமில் MIC தொகுதி கூட்டத்துக்கு மக்களை பஸ்ஸில் அழைத்து வந்து உணவு கொடுத்தது கையில் பணமும் கொடுத்து கூட்டத்தை நடத்தியது தொகுதி பெருமை பேசலாம் , ஆனா கிளைத் தலைவர்கள் பலர் நோர்டினுக்கு பாடம் புகட்டனும் என்று இருகின்றார்கள். அண்ணா சொன்னதை இவன் சொன்னால் கேட்க MIC மடையன்கள் தான் கேட்கணும்?
சரவணனை தோர்க்க அடியுங்கள் ,சமயத்துக்கு தகுந்த மாதிரி பல்டி அடிக்கிறான்
இவனையெல்லாம் செருப்பால் அடிச்சு விரட்டனும். அதுக்கு முன்னால் இவன கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தானே ஒரு மானங்கெட்ட ம.இ.கா. படவா, அவனை செருப்பால அடிச்சு விரட்டனும். அப்புறம் மேலேயுள்ள போட்டோவுல சூல்கிஃப்லி பக்கத்துல நிக்குற அத்தனை தமிழனையும் தூக்கிப்போட்டு மிதிக்கனும். அதுக்கப்புறம் அவனுக்கு தூக்குத் தூக்கியா வேலை செய்யும் ம.இ.கா., ஐ.பி.எஃப், மக்கள் சக்தி, பி.பி.பி., நல்லகருப்பன், இப்போது மானமிழந்து பாரிசானுக்கு ஓட்டு கேட்கும் ஹிண்ட்ராஃப் அத்தனைப் பேரையும் கசையடிச்சு கழுதை மேல ஏத்தனும். சூல்கிஃப்லி, உனக்கு இத்தேர்தல் ஒரு சாவு மணிடா பரதேசி.
இந்த தேர்தலில் இந்த இன வெறியனுக்கு மரண அடி கொடுப்போம்.
மறு பிறவி இல்லை ! இதுதான் கடைசி பிறவி !! மண்டையிடி !
இதோடு தொகுதியை விட்டுவிட்டு ஓடட்டும் பச்சோந்தி !
இதற்கு முன் கூறியதை போல இந்தியர்களின் சமய விவகாரத்தில் கை வைத்த இத ஜுக்கப்பிளிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் .எதை வேண்டும்மானாலும் பேசிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கையாகிவிட்டது .இவரது தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட நமது இந்தியர்களை என்ன வென்று சொல்வது .எனக்கு ஒன்று தோன்றுகிறது உண்மையில் இதில் கலந்து கொண்டவர்கள் மற தமிழர்களா இல்லை ம —- தமிழர்களா