புக்கிட் தெங்காவில் தெங்-கைக் காப்பாற்ற நஜிப் அங்கு செல்கிறாரா ?

tengபினாங்கில் உள்ள புக்கிட் தெங்கா தொகுதிக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நாளை வருகை  அளிக்கிறார்.

சுறுசுறுப்பு இல்லாத பிஎன் தேர்தல் பிரச்சாரத்துக்கு புத்துயிரூட்ட அவர் அங்கு செல்கிறாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

அந்தத் தொகுதியில் நடத்தப்படும் பிஎன் நிகழ்வுகளுக்கு போதுமான கூட்டத்தைக் கவர மாநில பிஎன் தலைவரும் புக்கிட் தெங்கா வேட்பாளருமான தெங் சாங் இயாவ் தவறி விட்டதாக அரசியல் பார்வையாளர்கள்  நம்புகின்றனர். அந்தத் தொகுதியில் தெங்-கை எதிர்த்து பிகேஆர் சார்பில் ஒங் சின் வென் நிறுத்தப்பட்டுள்ளார்.

teng1பிஎன் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறத் தவறிய முன்னாள் பிஎன் பத்து கவான் ஒருங்கிணைப்பாளர் ஏ மோகனும் அந்தத் தொகுதியில் சுயேச்சையா போட்டியிடுகிறார். அவரும் வாக்குகளை தெங்-கிடமிருந்து திசை  திருப்ப முடியும்.

தெங் பிரச்னைகளை எழுப்பவும் விளக்கவும் அன்றாடம் நிருபர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் இப்போது நான்கு சந்திப்புக்களை ரத்துச் செய்து விட்டார்.

தெங் வாக்காளர்களைக் கவருவதற்கு உதவியாக நஜிப் அந்தத் தொகுதியில் உள்ள ஜுரு தொழில் பேட்டைக்கு வருகை அளிக்க நஜிப் திட்டமிட்டார் எனக் கூறப்படுவதை தெங் நண்பர்கள் மறுத்தனர்.

“நஜிப் பினாங்கிற்கு வரவிருக்கிறார். அதனால் அவரை அந்தத் தொகுதிக்கு வருமாறும் நாங்கள் அழைத்தோம்,” என பத்து கவான் கெரக்கான் தொகுதித் தலைவர் இங் சியூ லாய் கூறினார்.

பிஎன் -னுக்கு 50க்கு 50 விழுக்காடு வாய்ப்புள்ள புக்கிட் தெங்கா தொகுதியில் வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தில் ஈடுபட பிஎன் விரும்புவதாக அவர் சொன்னார்.