ஹிண்ட்ராப் உதயாவுக்கு எதிராக கைது ஆணை (வாரண்ட்)

uthayaஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி உதயகுமார், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக்  குற்றச்சாட்டுக்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமக்கு ஜாமீன் கொடுத்தவர், ஏப்ரல் 2 முதல் மே 17 வரை தாம் “நீதிமன்றத்தில் கலந்து கொள்வதற்கு  பொருத்தமான உடல் நிலையில்  இல்லை” (“not fit to attend court”) எனக் கூறும் மருத்துவச் சான்றிதழை ஷா அலாம் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்குச் சமர்பித்த போதும் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்  சொன்னார்.

“இருந்தும் அரசாங்க வழக்குரைஞர் அதனை ஆட்சேபித்ததுடன் தாம் கோத்தா ராஜா, ஸ்ரீ அண்டலாஸ்
ஆகியவற்றில் செராமாக்களிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொள்வதாகச் சொன்னார். அதனால் கைது ஆணை
வெளியிடப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். நீதிபதி அகமட் ஸாமானியும் கைது ஆணை
வெளியிடப்படுவதற்கு அனுமதி அளித்தார்,” என உதயகுமார் மேலும் கூறினார்.

தமது உடல் நிலை காரணமாக தாம் பிரச்சார நடவடிக்கை அறைக்குள் மட்டுமே தாம் வேலை செய்வதாக
அவர் குறிப்பிட்டார்.

prolapsed discs, முதுகுத் தண்டில் சிறிய வளர்ச்சிகள் ஆகிய பிரச்னைகள் அவற்றுள் அடங்கும். அதற்காக தாம் மலேசிய தேசியப் பல்கலைக்கழக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகராஜா பரானாசித்தமிடமிருந்து மருத்துவ விடுமுறைச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக உதயகுமார் தெரிவித்தார்.