மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கு இந்த வருடமும் கோவிந்தா!

எம். குலசேகரன், ஈப்போ பாரட், ஏப்ரல் 29, 2013.

kulaமெட்ரிக்குலேசனில் சேர்ந்து படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்றுதான் வெளியானது. இதனையொட்டி நான் ஏறக்குறைய 80 தொலை பேசி அழைப்புக்களை இதுவரை பெற்றுள்ளேன். அழைத்த அனைவருமே, தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் பேசினார்கள். அழைத்த அனவருமே இந்திய பெற்றோர்கள்தான்.

மாணவர்கள் 9A, 10A வைத்திருந்த்தும் தங்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்று என்னிடம் அந்த பெற்றோர்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.

இந்த மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலும், உடல் உழைப்புத் தொழிலாளிகளாகவும், லாரி ஓட்டுனர்களாகவும் இருப்பதாக தெரியவருகிறது. வருமையான சூழலிலும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் எதிர்கால கனவை நனவாக்க நினைக்கும் இந்த இளம் பிள்ளைகளை ஏமாற்றுவது போல் உள்ளது அரசாங்கம் செய்யும் இந்தப் பாரபட்சமான செயல்.

வருடா வருடம் இதே பிரச்சனைகளைத்தான் நமது இந்திய மாணவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். முதலில் சில இடங்களைக் கொடுக்க வேண்டியது, பின்பு சமுதாயத்திலிருந்து எதிர்புக் குரல் வந்ததும் மீண்டும் சில இடங்களைக் கொடுத்து பிரச்சைனயை மூடி மறைப்பது.

இந்தத் தொடர் கதை இந்த வருடமும் மீண்டு அரங்கேற உள்ளது. சென்ற வருடம் கூட  மக்கள் கடுமையாகப் போரடிய பின்னரே 1,500 இடங்களை ஒதுக்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அப்படியிருந்தும்கூட வெறும் 900 இடங்களே இந்திய மாணவர்களால் நிரப்பப்பட்டன. அதுவும் கட்டம் கட்டமாகவே இந்த இடமும் நிரப்பப்பட்டது. சில மாணவர்கள் தங்களுக்குத்தான் இடம் கிடைக்கவில்லயே என்று மனம் நொந்து வேறு கல்லூரிக்கோ அல்லது தனியார் கல்விக்கூடங்களுக்கோ தங்களை பதிந்து  கொண்டு  இருக்கும் வேளையில் மெட்ரிக்குலேசனில் இடம் கிடைத்து விட்டதாக அழைப்பு வரும். அந்த  நேரம் அந்த பெற்றோர்களின் மன நிலை, மாணவர்களின்  சங்கடம் இவற்றை யார் அறிவார்கள்?. இது வேண்டுமென்றே மாணவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கையாக இந்தியப் பெற்றோர்கள் பலர் உணர ஆரம்பித்துள்ளார்கள்.  அது மட்டுமல்ல. இடம் கொடுப்பததைத் தவிர்ப்பதற்காக வழிகளில் இதுவும் ஒன்று!

13 மெட்ரிக்குலேசன் கல்லூரிகளில் சுமார் 26,000 மாணவர்கள் பயில்கிறார்கள். அதில் இந்திய மாணவர்களுக்கு 5% என்று கணக்கிடால் கூட ஏறக்குறைய 1500 மாணவர்களுக்குத்தான் பயில வாய்ப்புள்ளது. அதிலும் தில்லுமுல்லு செய்து எண்ணிக்கையை குறைக்கிறது இந்த அரசாங்கம். ஏன் இந்த ஓரவஞ்சனை? இது  கடந்த 57 ஆண்டுகளாக இந்தியர்களை வெற்றிகரமாக ஓரங்கட்டி வரும் பாரிசான் அரசாங்கத்தின் இன்னொரு திட்டம்.  மக்களுக்கு முன்னுரிமை என்று கூறும் இவ்வரசாங்கம் கல்வி விஷயத்தில்   அந்த முன்னுரிமையை  எங்கு கொண்டு போய் போட்டது?

najibகடைசியாக எனக்குக் கிடைத்த தகவலின்படி இந்த வருடம்  வெறும் 500 இடங்கள் மட்டுமே இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக கேள்விப்படுகிறேன்.

புத்ரா ஜெயாவில் உள்ள கல்வி அதிகாரிகள் சென்ற வருடம் 1,500 இடங்கள் கொடுக்கப்பட்டு இந்த வருடம்  500 ஆக குறைக்கப்பட்டது ஏன் என்ற பெற்றோர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அது சென்ற வருடத்தில் சிறப்பு உத்தரவின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்கள். அப்படி ஒரு சிறப்பு உத்தரவு இந்த வருடம் இல்லாததால் வழக்கமாக ஒதுக்கப் படும் வெறும் 500 இடங்களே நிறப்பப்படும் என்று பதில் அளித்தனராம்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் பாராமரிப்பு அரசாங்கத்தில் பிரதமராக இருக்கும் நஜீப்பின் உத்தரவை எந்த அரசு Palanivel-and-MICஅதிகாரிகளும் ஏற்கக்கூடாது, ஆகவே நஜிப்பும் அவர் இஷ்டத்திற்கு இந்தியர்களுக்கு இத்தனை இடங்கள் என்று அறிவித்தாலும், அது இந்த தேர்தல் காலத்தில் செல்லுபடியாகாது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய மாணவர்களுக்கு யார் உதவி செய்ய முடியும்?  யார்? யார்? யார்?

ம.இ.கா இதனையொட்டி என்ன சொல்லவிருக்கிறது? என்ன சொல்ல முடியும்? அதுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இன்று கேமரன் மலையில் ஏற முயன்று கொண்டிருக்கும் மஇகா தலைவர் ஜி. பழனிவேல்  “இந்திய சமுகம் ஓரங்கட்டப்பட்டது. அதில் சந்தேகமே இல்லை” என்று கூறிவிட்டாரே!

ஒரு நீண்ட கால கல்வித் திட்டம் இந்தியர்களுக்காக கொண்டிராத, தன் சொந்தப் குடிமக்களுக்கிடையேயே கல்வியில் பாகுபாடு காட்டும் இந்த பாரிசான் அரசாங்கத்திற்கு இந்திய மக்கள் வரும் பொதுத்தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.