முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் வேதமூர்த்தியின் கொடும்பாவிக்கு எரியூட்டினர்

kulimஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பி வேதமூர்த்தி பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  தலைமைத்துவத்தை அங்கீகரிக்க முடிவு செய்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியைத் தெரிவிப்பதற்காக  கூலிமில்  முன்னாள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குழு ஒன்று அவருடைய கொடும்பாவிக்கு எரியூட்டினர்.

“வேதமூர்த்தி ‘தமது சொந்த நலனுக்காக இந்தியர்களுடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும்  அம்னோவிடம் அடகு வைத்து விட்டதாக அந்தக் குழுவின் பேச்சாளரான எம் அசோகன் கூறினார்.

பிஎன், அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் ஆகியவை மீதான தங்களது மகிழ்ச்சியின்மையையும் வெறுப்பையும்  காட்டுவதற்காக 2007ம் ஆண்டும் 2008ம் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்  செய்ததாக அவர் சொன்னார்.

“ஆனால் அந்த வரலாற்று நிகழ்வுகளை மறந்து விட்டு வேதமூர்த்தி இப்போது அம்னோவுடன் கூட்டு
சேர்ந்துள்ளார்.”kulim1

“ஒரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்து விட்ட  வேதமூர்த்தியை மலேசிய இந்தியர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்,” என பாயா புசாரில் 500  பேருக்கும் மேல் கலந்து கொண்ட எதிர்ப்புக் கூட்டத்துக்குப் பின்னர் அசோகன் கூறினார்.

பாயா புசார், பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. அந்தத் தொகுதியில் முன்னாள்
ஹிண்ட்ராப் வழக்குரைஞரும் நடப்பு பிகேஆர் உதவித் தலைவருமான என் சுரேந்திரன், அதன் நடப்பு எம்பி
என் கோபாலகிருஷ்ணன், பிஎன் -னின் ஹெங் சியா கீ, சுயேச்சைகளான ஹமிடி அபு ஹசான், ஒஸ்மான் வாவி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

kulim2வேதமூர்த்தி ஏப்ரல் மாதம் நஜிப்புடன் புரிந்துணர்வுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்தில்  பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட பின்னர்  அவருடைய ஆதரவாளர்களில் சிலர் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஹிண்ட்ராப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கும் வேதமூர்த்தியின் சகோதரர் உதயகுமார், தங்கள்  போராட்டத்தைக் கடத்தி விட்டதாகக் கூறி வேதமூர்த்தியை அந்த இயக்கத்திலிருந்து நீக்கினார்.

இந்தியர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக வேதமூர்த்தி தமது உண்ணாவிரதத்தை ‘நாடகமாக்கி விட்டதாக’  அசோகன் சொன்னார்.

நஜிப்பை சந்தித்ததின் மூலம் இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லா கடுமையான பிரச்னைகளையும் புரிந்துணர்வுப்  பத்திரம் தீர்த்து விட்டதாக வேதமூர்த்தி கூறியதாக அவர் குறிப்பிட்டார்.kulim3

“ஆனால் கடந்த காலத்தில் மஇகா உட்பட பல்வேறு தரப்புக்கள் அம்னோ/பிஎன் அரசாங்கத்திடம் சமர்பித்த  பல புரிந்துணர்வுப் பத்திரங்கள் வழியான முறையீடுகளில் எதுவும் நிறைவேறவில்லை என்பதை அவர் கொஞ்சம்  கூட உணரவில்லை,” என்றார் அசோகன்.

“ஆகவே வேதமூர்த்தி முன்மொழிந்த அந்தக் கோரிக்கைகளை அமலாக்க அம்னோ அரசாங்கம் விருப்பத்துடன் ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்வது முட்டாள்தனமானதாகும்,” என்றார் அவர்.

“வேதமூர்த்தி நடத்தியது எல்லாம் நல்ல அரசியல் நாடகம் என்பதை இந்தியர்களாகிய நாங்கள் புரிந்து  கொண்டுள்ளோம்,” என அவர் வலியுறுத்தினார்.

kulim4இந்தியர்களுடைய வெறுப்பை அதிகம் தேடிக் கொண்டுள்ள இன்னொரு மனிதர் கூலிம் பண்டார் பாரு  முன்னாள் எம்பி-யான சுல்கிப்லி நூர்டின் என அசோகன் தெரிவித்தார்.

மலேசியா இந்திய சமூகத்துக்குச் சொந்தமானது அல்ல என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல  வேண்டும் என்றும் கூறி சுல்கிப்லி இந்து சமயத்தை “குறை கூறி கண்டனம்” செய்துள்ளார் என அசோகன்  கூறிக் கொண்டார்.

சுல்கிப்லி விடுத்த அறிக்கை இந்தியர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இப்போது அவர் பிஎன் சின்னத்தில்
போட்டியிடும் ஷா அலாமில் உள்ள இந்தியர்கள் அவருக்கு பாடம் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

“சுல்கிப்லி இப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தமக்கு வாக்களிக்குமாறு ஷா அலாமில் உள்ள
இந்தியர்களைக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவர் சந்தர்ப்பவாதி, இனவாதி என்ற அவருடைய
உண்மையான சொரூபத்தை இந்தியர்கள் அறிந்துள்ளனர்,” என்றார் அவர்.

“இந்தியர்களாகிய நாங்கள் எங்கள் அதிருப்தியை காட்டுகிறோம். அவருடைய  நடவடிக்கை தேச நிந்தனையானது என நாங்கள் கண்டிக்கிறோம். அந்த நடவடிக்கை இந்த நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும்,” என அசோகன் மேலும் கூறினார்.