டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அழியா மையைத் தடவுமுன்னர் மைபுட்டியைக் குலுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் (இசி) கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார்.
இசி-இன் கூற்றை “அர்த்தமற்றது” என்று வருணித்த அவர், அழியா மையைப் பயன்படுத்துவதற்குமுன் நன்றாகக் குலுக்க வேண்டும் என்பதை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை என்றார்.
“இசி உண்மையைச் சொல்ல வேண்டும். எதற்காக இப்படி ஒரு மையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
“எத்தனை தடவை குலுக்குவது? ஒரு மணிக்கு ஒரு தடவையா, இரண்டு தடவையா?”.
இன்று காலை ஜோகூர் பாருவில், லிம் செய்தியாளர்களிடம் பேசினார்.