‘அழியா மையின் கறைகளை பூதக் கண்ணாடியில் காண முடியும்’

inkஅழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக் கண்ணாடியில் காண முடியும் எனத் தேர்தல்  ஆணையம் (இசி) அழியா மையைத் தான் பயன்படுத்துவதை தற்காத்துப் பேசியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அந்த சம்பவங்கள் தனிப்பட்டவை என இசி செயலாளர் கமாருதின் பாரியா சொன்னதாக தி ஸ்டார் நாளேட்டில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த மையை முற்றாக அழிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.

அந்த நேரத்தில் சில இசி அதிகாரிகள் நடுக்கமாக இருந்திருக்கலாம். அதனால் அந்த மையை முறையாகப் பயன்படுத்துவதற்குக் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றாமல் போயிருக்கலாம் என கமாருதின் சொன்னார்.

“அந்த அழியா மையை நாங்கள் பயன்படுத்துவது இது தான் முதன் குறை. அதனால் அதிகாரிகளுக்கும் சற்று நடுக்கமாக இருந்திருக்கலாம். என்றாலும் அதில் பெரும்பகுதியைக் கழுவ முடியும் என்றாலும் அதன் கறைகள்  இன்னும் இருக்கும். அந்த மையை சோதிப்பதற்கு எங்கள் அதிகாரிகளுக்கு பூதக் கண்ணாடிகள் கொடுக்கப்படும்,” என கமாருதின் தெரிவித்தார்.

சோதனை செய்வதற்கு சோப், thinner, spirit, Acriflavine lotion, vinegar, iodine ஆகிய பொருட்கள் கூடப் பயன்படுத்தப்பட்டதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் கூறியது.