வேதமூர்த்தியின் பரப்புரையைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் முயற்சி தோல்வி

1 protestநேற்றிரவு,  கேலாங் பாத்தாவில்   இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி  பிஎன்னுக்காக பரப்புரை செய்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமொன்று தடுக்க முயன்றது.  ஆனால், போலீசார் தலையிட்டு அவர்களைத் தடுத்தனர். ஒருமணி நேரம்  இருதரப்பினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

1 protest1ஸ்கூடாய், தாமான்  நேசாவில் ஒரு செராமாவில் சுமார் 300 குடியிருப்பாளர்களிடம் பேசிய வேதமூர்த்தி (இடம்),  வேட்புமனு தினத்துக்கு இரண்டு நாள் முன்னதாக ஏப்ரல் 20ஆம் தேதி, பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் இண்ட்ராப் செயல்திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டதை விளக்கி அதன் காரணமாக இந்தியர்கள் இத்தேர்தலில் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அப்போது சுமார் 10 இந்தியர்கள் பிகேஆர் உறுப்பினர் கே.செல்வகுமாரன் தலைமையில் அவரை நோக்கிச் சென்றனர்.

ஆனால், அந்நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அக்குழுவினரை செராமா நடந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

1 pro selva“நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்: அவர் யார் இந்தியர்களைப் பிரதிநிதிக்க? இண்ட்ராப்புக்குத் தலைமையேற்கும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது யார்?”, என்று செல்வகுமாரன் உரத்த குரலில் கேட்க, மற்ற ஆர்ப்பாட்டக்காரர்களும் வேதமூர்த்தியை நோக்கிக் கூச்சலிட்டனர்.

பதிலுக்கு, ஆரஞ்ச் நிற டி-சட்டை அணிந்த வேதமூர்த்தியின் ஆதரவாளர்கள், “இண்ட்ராப் வாழ்க! இண்ட்ராப் வாழ்க!”, என்று முழக்கமிட்டனர்.

சுமார் 30 போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தள்ளிக்கொண்டே சென்று செராமா நடந்த இடத்திலிருந்து கிட்டதட்ட 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தினார்கள். அங்கிருந்தவாறு அவர்கள், “Ubah (மாற்றம்)! Ubah! Ubah! Bodoh (முட்டாள்) Bodoh! Bodoh!” என்று சத்தமிட்டனர். அதைப் பொருட்படுத்தாமல் வேதமூர்த்தி தம் உரையைத் தொடர்ந்தார்..