புதிய மலாக்கா முதலமைச்சராக இட்ரிஸ் ஹரோன் நியமிக்கப்பட்டார்

idrisஅம்னோ உச்ச மன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன் மலாக்கா மாநில புதிய முதலமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை நிர்வாகம் செய்த முகமட் அலி ருஸ்தாமுக்குப் பதில் அவர் அந்தப்
பொறுப்பை ஏற்றுள்ளார்.

இட்ரிஸ் இன்று காலை மலாக்கா யாங் டி பெர்துவா நெகிரி முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்  கொண்டார்.

46 வயதான இட்ரிஸ் தாங்கா பத்து அம்னோ தொகுதித் தலைவரும் ஆவார். அவர் 9,000 வாக்குகள்  பெரும்பான்மையில் சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜாசின் அசாஹானில் பிறந்த அவர், பொறியியலாளராக பயிற்சி பெற்றவர். அவர் தெனாகா நேசனல்
பெர்ஹாட்டில் பணியாற்றியுள்ளார். அவர் Syarikat Perumahan Negara Bhd-ன் தலைவரும் ஆவார்.