13வது பொதுத் தேர்தலில் சிறிய பெரும்பான்மை மூலம் அதிகாரத்தைப் பெற்ற டாக்டர் ஜாம்ரி அப்துல் காதிர் பேராக் மாநிலத்தின் 12வது முதலமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார்.
அவர் கோலா கங்சாரில் உள்ள இஸ்தானா இஸ்காண்டிரியாவில் பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா முன்னிலையில் இன்று காலை மணி 10.45 வாக்கில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஜாம்ரி தமது பங்கோர் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் முகமட் சைபுல்லா முகமட்
சுல்கிப்லியையும் சுயேச்சை வேட்பாளரான பெர்னார்ட் பாரென்பா-வையும் தோற்கடித்து 5,124 வாக்குகள்
பெரும்பான்மையில் அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.
கலி முத்தி விட்டது உலகம் அழிய போகிறது என்பதற்கு இதுவெல்லாம் ஒரு முன் அடையாளமோ? !!