சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை அதன் நடப்பு பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் காலித் இப்ராஹிம் வழி நடத்துவாரா இல்லையா என்பது மீது இன்னும் முடிவு எடுக்கப்படாததால் அவருடைய நிலைமை இன்னும் தெளிவாகவில்லை.
அடுத்த தவணைக் காலத்துக்கு யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் என்பது மீது விரைவில் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன் முடிவு கூட்டணியின் தலைவர்கள் மன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி மற்ற மாநில பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடன் நடத்திய கூட்டு நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
“நாங்கள் விவாதிப்போம். பக்காத்தான் தலைவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் பின்பற்றுவோம். எதிர்காலத்தில் நாங்கள் வலுவாக இருக்க நாங்கள் பக்காத்தான் இணக்க உணர்வையும் கலந்தாய்வையும் கடைப்பிடிப்போம்,” என நிருபர்கள் கேள்விக்குப் பதில் அளித்த போது அஸ்மின் சொன்னார்.
இதனிடையே சிலாங்கூரில் பாஸ் கட்சி பிகேஆர் கட்சியைக் காட்டிலும் வலுவாக இருந்த போதிலும் தமது கட்சிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என ஷா அலாம் எம்பி காலித் சமாட் கூறியுள்ளார்.
சிலாங்கூரில் பாஸ் 15 சட்டமன்ற இடங்களையும் டிஏபி 15 இடங்களையும் பிகேஆர் 14 இடங்களையும் வென்றுள்ளன.
“பக்காத்தான் ராக்யாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே பலத்தைக் கொண்டவர்கள்,” என்றார் அவர்.
சிலாங்கூரில் பக்காதான் ஆட்சி நிலை நிலைக்க மறுபடியும் டான் ஸ்ரீ
காலிட்டே மந்திரி புசாராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும்….
அனைத்து ரீதியிலும் அனுசரித்துப்போகக்கூடிய தன்மை கொண்ட இவர் தனது பொறுப்பிலும் முழு கவனம் கொண்டவர்…….
அவர் அளவுக்கு நிர்வாக திறன் யாரிடம் உள்ளது. இருந்தால் அவரிடம் கொடுங்கள்.இல்லை என்றால் அவரே முதல்வர்.
ஓட்டுப் போட்ட பிறகு விரலில் தடவிய மை ‘காணாமல்’ போறதுக்குள்ளே பதவி தாகமா பாஸ்? காலிட் நல்லாத்தானே ஆட்சி செய்தார். பாஸ் ஆட்சி செய்தால் இன்னொரு ‘கெடா நிலைதான் நமக்கு.
காலித் அவர்களே சிறந்த தலைமைத்துவம் கொடுக்க முடியும் !
கஹளிடிற்கு 5 ஆண்டு அனுபவம் உள்ளது அக்காவே அவரே இன்னும் சிலங்குரை இன்னும் சிறப்பாக வலி நடத்துவர்
மாண்புமிக கலித் அவர் முதல் அமைச்சர் வர வேண்டும்…
பொறுத்து நன்கு ஆலோசித்து நல்ல ஒரு முடிவுக்கு வாருங்கள். வந்த பின்பு அதை அனைவரும் முழு மனதுடன் ஏற்று செயலில் இறங்குங்கள். நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. என் மனம் நிரந்த வாழ்துக்கள்.
பொருளாதாரத்திலும், அரசியலிலும்,மத இன ஒற்றுமைகாப்பதிலும் நல்ல முதிர்ச்சி பெற்றவர். இன்று “தாபோங் ஹாஜி” பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பில் ( 1974 ஆண்டுகளில்) இருந்தவர் இவர் . அப்போது சரவாக் மாநிலத்தில் பிரசார கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் ஆதரவை வெகுவாக கவர்தவர். அங்கு அவரின் பேச்சை கேட்டதுண்டு! 5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சிபுரிந்துள்ளார். மீண்டும் ஆள்வதில் என்ன குறை? ஒரு பழமொழி , ” வயிற்றில் உள்ள குழந்தையை நம்பி இடுப்பில் இருந்த பிள்ளையை வீசியெரிந்தானாம் கனவு பித்தன் ” இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்வோம் !!!
காலித் இப்ராஹிம் அவர்களே சிலாங்கூர் முதல்வராக வேண்டுமென்பதே பெரும்பாலோரின் விருப்பமாகும், கடந்த தவணையில் மிகத்திறமையாக சிலாங்கூரை வழிநடத்தியுள்ளார்.
PKR க்கு ஒரு இடம் குறைவு என்பதற்காக ஒரு சிறந்த முதலமைச்சரை தவிர்க்க நினைப்பது தவறு. கெடாவில் PAS தனது நிர்வாகக் கோளாறினால் அந்த மாநிலத்தை இழந்தது நல்ல படிப்பினை. எனினும் நல்ல ஒரு முடிவை எடுப்பர் என எதிர்ப்பார்ப்போம்!
பாஸ் kachi
தான் வேண்டும்
என்று சொல்லி கிழவனை கொண்டு வர வேண்டாம்.அப்பரும் கெடா மாதிரித்தான்.