அம்னோ தலைவர் என்ற முறையில் நஜிப் அப்துல் ரசாக்தான், அக்கட்சிக்குச் சொந்தமான நாளேடு உத்துசான் மலேசியாவின் முதல்பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடப்பட்டிருந்த ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்புச் செய்திக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அன்வார் இப்ராகிம்.
“அவர்கள் நஜிப் சொல்வதைக் கேட்பவர்கள். முதலாவதாக, அது ஒரு அம்னோ செய்திதாள்.
“இரண்டாவதாக, எனக்கு இது எப்படி தெரியும் என்றால், நான் அம்னோ துணைத் தலைவராக இருந்தபோது அம்னோ தலைவர் ஒவ்வொரு நாளும் உத்துசானுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பணிப்பார்”. இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் அன்வார் பேசினார்.
மீண்டும் பிரதமராக பதவியேற்ற நஜிப், இவ்வாண்டு தேர்தலில் பிஎன்னின் மோசமான அடைவுநிலைக்கு “சீனர் சுனாமி” மீது பழி போடுவது, வேறுபாடு களைந்து இணக்கம் காண்போம் என்று அவர் அறைகூவல் விடுத்ததற்கு முரணாக உள்ளது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் கூறினார்.
அம்னோ தலைவர்கள் தொடர்ந்து உத்துசானுக்கு “ஆசி கூறுவதும் ஆதரிப்பதும்” துரதிஷ்டவசமானது என்று அன்வார் கூறினார்.
சிவப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துகளில் வெளியாகியிருந்த அச்செய்தித் தலைப்பு பல இனத்தவரையும் ஆத்திரமுறச் செய்தது. அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லாவும் கூட அதைக் கண்டித்திருந்தார்.
இன்னும் உத்துசான் தனது இனவாதப் போக்கை கைவிடவில்லை.அம்னோவின் அரசியல் பக்கப் பலம் உள்ளதால் அது அடிக்கடி கதண்டுக் கூட்டை உரசிப் பார்க்கிறது.நெருப்போடு விளையாடும் செயல் இது.
உண்மை அது அல்ல! அனைத்து சதி வேலைகளும் மாமாக்திர்தான் காரணம்! இந்நாட்டை இன்னுமும் அவன்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்! pdrm,ec மற்றும் எல்லா கள்ள ஓட்டுகள்,பங்களா,
மியான்மார்,இந்தோனேசியா மற்றும் ஏனைய வெளி நாட்டினர் நமக்கு எதிராக நடத்தப்பட்ட ஜனநாயக தாக்குதல்கள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம் அம்னோ/பின் அட்டுழியங்களை!!!