மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று ஒரு கருத்தரங்கில் முன்னாள்-நீதிபதி ஒருவர் பேசிய பேச்சு இனவாதம் நிரம்பியது எனக் கண்டித்துள்ளார். அதை அவர், அடோல்ப் ஹிட்லர், கூ கிளக்ஸ் இரகசியக் கும்பல் போன்றோரின் பேச்சுடன் ஒப்பிட்டார்.
“முன்னாள்-நீதிபதி முகம்மட் நூரின் பேச்சை ஹிட்லரோ, கூ கிளக்ஸ் இரகசியக் கும்பலோ கேட்டால் வெட்கி தலைகுனிவர்.
“சட்டவிரோத நஜிப் அரசாங்கம் இனவாதத்தைப் பரப்பி வருவதை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்துக் கொண்டிருப்பது?”, என்று அன்வார் தம் வலைப்பதிவில் வினவியுள்ளார்.
நேற்று யுஐடிம் மலேசியா பட்டதாரிகள் சங்கமும் தீவகற்ப மலாய் மாணவர் சங்கக் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய முகம்மட் நோர், 13வது பொதுத் தேர்தலில் “நம்பிக்கை துரோகம்” செய்த சீனர்கள் கடும் விளைவை எதிர்நோக்குவர் என்று எச்சரித்தார்.
“மலாய்க்காரர்களைப் பொருத்தவரை நம்பிக்கை துரோகம் என்பது தகாத ஒன்றாகும். தங்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டால் பொறுக்க மாட்டார்கள். கொதித்து எழுவார்கள், அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கை வரம்புமீறிச் சென்றுவிடும்”, என்று அந்த முன்னாள்-நீதிபதி மொழிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோ வெறுப்பையும் வேறுபாட்டையும் விதைத்து வருகிறது என்று அன்வார் சாடினார். ஆனால், பக்காத்தான் ரக்யாட் அப்படியல்ல. “அம்னோ வெறுப்பையும் வேறுபாட்டையும் விதைத்து வரும் வேளையில் பக்காத்தான் ரக்யாட், நல்லெண்ணத்தையும் ஒருவரை மற்றவர் மதிக்கும் பண்மையும் போற்றி அதன்வழி சமுதாயத்தில் அமைதியையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தி வரும்.
“தோளோடு தோள் சேர்த்து ஒற்றுமையைப் பேணுவோம். ஈப்போவில் இன்றிரவு (505 பேரணிக்கு) அணிதிரண்டு வந்து அனாக் மலேசியா என்பதன் பொருளை இந்த வெறியர்களுக்குப் புரிய வைத்த மலேசியர்களுக்கு நன்றி”, என்றவர் கூறினார்.
உன்னுடைய இனவாதம் இனிமேல் எடுபடாது ,அதிக மலாய்காரர்கள் விழித்து கொண்டார்கள்.
போளிடேக்னிக் கதை என்னாச்சி