மே 5 பொதுத் தேர்தலில் மலேசிய சீனர்களுடைய ஆதரவை இழந்ததால் மேலும் வலது பக்கம் திரும்ப அம்னோ முடிவு செய்யுமானால் அது அரசியல் தற்கொலையாக இருக்கும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா தமது கட்சியை எச்சரித்துள்ளார்.
அம்னோ தனது மிதவாத சித்தாந்தத்தைத் தொடர வேண்டும் என்றும் தீவிரவாதம் இனவாதம் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அம்னோ, இனவாத அரசியலை நோக்கி மேலும் நகர்ந்து செல்வதாகத் தெரியவில்லை என முன்னாள் துணை அமைச்சருமான சைபுடின் சின் சியூ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
என்றாலும் இறுதி முடிவு இவ்வாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் கட்சித் தலைமைத்துவத் தேர்தலைச் சார்ந்திருப்பதாக அவர் கருதுகிறார்.
“இவாண்டு நிகழும் கட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமையும் உச்சமன்றத்தை அம்னோவின் எதிர்காலம் சார்ந்துள்ளது,” என சைபுடின் சொன்னார்.
தாராளப் போக்குடைய இளம் அம்னோ தலைவர் எனக் கருதப்பட்ட அவர் தமது தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசானிடம் தோல்வி கண்டார்.
சீனர்களை கைவிட்டால் 14வது பொதுத் தேர்தலில் தோல்வி ஏற்படும்
சீன வாக்காளர்கள் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் -னை ஆதரிக்காததால் அவர்களைக் கவருவதற்கான முயற்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக் கொள்ளும் தரப்புக்கள் ‘தீவிரவாத மலாய்க்காரர்கள்’ என அவர் சொன்னார்.
மசீச-வையும் பிஎன் கைவிட்டாலும் அந்த சீனர்கள் கட்சி சீன வாக்காளர்கள் மீது நம்பிக்கை இழந்தாலும் பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என சைபுடின் கருதுகிறார்.
“அமைச்சரவையில் சீனர் பேராளர்கள் இல்லை என்றால் நாம் 14வது பொதுத் தேர்தலுக்கு நாம் விடை கொடுத்து விடலாம்.”
இந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களுடைய ஆதரவை அதிகரிப்பதில் மஇகா அடைந்துள்ள வெற்றியைச் சுட்டிக் காட்டிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் மசீச-வும் அவ்வாறு செய்ய முடியும் என்றார்.
பிஎன் தேர்தல் இழப்புக்கு பொறுப்பேற்று நஜிப் பதவி துறக்க வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகளை சைபுடின் நிராகரித்தார். ஜனநாயக நாடு ஒன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்பது இனிமேல் முடியாது காரியம் என்றார் அவர்.
“2008 தேர்தலைக் காட்டிலும் அம்னோ இந்த முறை நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் பாடாவியைக் காட்டிலும் நஜிப் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ளதை அம்னோ உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.”
நஜிப் இல்லாவிட்டால் இந்த நிலையை பெற்றிருக்க முடியாது என சைபுடின் அம்னோ உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார்.
13வது பொதுத் தேர்தலில் ‘சீனர் சுனாமி’ ஏற்பட்டதாக நஜிப் சொல்வதை மலாய் நாளேடான சினார்
ஹரியானுக்கு அளித்த இன்னொரு பேட்டியில் சைபுடின் நிராகரித்தார்.
கிட்டத்தட்ட அனைத்து மலாய் பெரும்பான்மை தொகுதிகளிலும் பிஎன் வென்றதையும் சீனர் பெரும்பான்மை தொகுதிகளில் பிஎன் தோல்வி கண்டதையும் குறிப்பிட்ட அவர், அதற்கு இன அடிப்படையை காரணம் சொல்லக் கூடாது என்றார். மேம்பாடு அல்லது ஜனநாயகத்துக்கான வாக்காளர் கோரிக்கையின் அடிப்படையில் அது அமைந்திருந்தது என சைபுடின் கருதுகிறார்.
என்றாலும் சைபுடின் நஜிப்பை தொடர்ந்து தற்காத்துப் பேசினார். மக்கள் மறந்து விட்ட தேசிய சமரசத்தையும்
பிரதமர் வலியுறுத்தியதால் அவரது அறிக்கை ‘சமநிலையானது’ என சைபுடின் சொன்னார்.
“உத்துசான் மலேசியா வெளியிட்ட செய்தி இன்னொரு பிரச்னை ஆகும். பிரதமரது அறிக்கை மிகவும்
சமநிலையானது என நான் எண்ணுகிறேன்.
இவனுடைய அறிக்கை படித்தால் எனக்கே தலை சுற்றுகிறது ,பிரதமருக்கு எப்படி சுற்றும் என்று தெரியவில்லை! முன்னுக்கு பின் முரணான கருதுக்கள் ஐயோ பாவம்.
மாண்புமிகு சைபுதீன் அப்துல்லா எடுத்துரைத்த கருத்துக்கள் உண்மையே . காலம் பதில் சொல்லும் என்பதும் உண்மை . இவர் தமது அரசியல் சிந்தனையை மிகவும் பக்குவமாகவும் உரிய நேரத்தில் பகிரங்கமாகவும் தெரிவிப்பதில் இவரைபோன்று ஒரு அம்னோ அரசியல் வாதியை இப்போ காண்பது அரிது ! பண்பட்ட அரசியல் மாமனிதர் இவர் இவருடைய சேவையை மலேசிய மக்கள் இழந்தது மிகவும் ஒரு துரதிஸ்டமே ! சீர்தூக்கி பாக்கின் பகாதான் இவரை தம்முடைய பக்கம் இழுத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் . இவருடைய முற்போக்கு சிந்தனை யாவரையும் அரவணைக்கும் பாங்கு போற்றதக்கது. மாற்றம் தான் நிரந்தரம் அது நடக்க வேண்டும் …நல்லவர்கள் வழிநடத்த …
மொத்தத்தில் சைபுதீன் , ”நல்லவரா ? கெட்டவரா நு தெரியலையே ஆஆ ஆ ஆஅ (கமல் ஸ்டைலில் )