பாஸ் கட்சிக்கும் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்திற்கும் இடையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு இன்னும் முடிவு செய்யப்படாத பின்னொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“நேற்று அந்தத் தேவாலயம் கடிதம் ஒன்றின் மூலம் சந்திப்பைத் தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பிரச்னை பொது மக்களிடையே தீவிரமாக விவாதிக்கப்படுவது குறித்து அவர்கள் மிகவும் கவலைப்படுகின்றனர்,” என அந்த இஸ்லாமியக் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று கோலாலம்பூரில் கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தத் தேவாலய வளாகத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் நடந்து கொண்டிருந்த நிதி திரட்டும் விருந்தின் போது ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சோதனை குறித்துப் பொது மக்களிடையே நிலவும் பல கருத்துக்கள், விளக்கங்கள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் தேவாலயம் கவலை அடைந்துள்ளதகவும் அவர் சொன்னார்.
“அவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம், இடம் ஆகியவற்றைத் தெரிவிப்பர்,” என முஸ்தாபா விளக்கினார்.