தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மஇகா தலைமைச் செயலாளர் பதவி துறந்தார்

muruஎஸ் முருகேசன் மஇகா தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

13வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி துறக்கப் போவதாக தாம் அளித்த உறுதிமொழிக்கு  இணங்க அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.

மே 5ம் தேதி நிகழ்ந்த தேர்தலில் அவர், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியை பாஸ் கட்சியின் நடப்பு
உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட்-டிடமிருந்து கைப்பற்றுவதில்  தோல்வி கண்டார்.

தமது நோக்கத்தை கட்சித் தலைவர் ஜி பழனிவேலிடம் கடந்த வாரம்  தெரிவித்து விட்டதாக அவர்
இன்று ஒர் அறிக்கையில் கூறினார்.

“எனக்கு அடுத்து பொறுப்பேற்பதற்குப் பொருத்தமான நபரை அவர் தேர்வு செய்வதற்காக நான் அவருக்கு சில
நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தேன்,” என தமது ராஜினாமா கடிதத்தை சமர்பித்த பின்னர் வெளியிட்ட
அறிக்கையில் முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.muru1

கடந்த தேர்தலில் போட்டியிட்ட 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் 4ல் மட்டும் வெற்றி பெற்ற மஇகா, புத்தாக்கம் பெற வேண்டிய தேவை இருப்பதாக முருகேசன் மேலும் கூறினார்.

“கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்லவும் இளைய தலைமுறையினருக்கு அதனைப் பொருத்தமானதாக மாற்றவும் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன்,” என்றார் அவர்.

“என்றாலும் தாம் விலகிக் கொண்டு கட்சியை மறுநிர்மாணம் செய்யும் பணியை மற்றவர்கள் தொடர அனுதிப்பதற்கான நேரம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன்,” என்றும் முருகேசன் மேலும் சொன்னார்.

தாம் சில காலம் ஒய்வு எடுத்துக் கொண்ட பின்னர் மஇகா கிளைத் தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புக்களைத் தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைமைச் செயலாளாராக சேவை செய்ய தமக்கு வாய்ப்பளித்த பழனிவேலுக்கும் முருகேசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அண்மைய தேர்தலில் கோத்தா ராஜா தொகுதியில் 29,395 வாக்குகள் பெரும்பான்மையில் சித்தி மரியா வெற்றி  பெற்றார்.

TAGS: